பெண் மனசு ஆழமுன்னு...

ண்கள் அவ்வளவு எளிதில் அறிந்துவிட முடியாத அளவுக்குப் பெண்களின் உலகம் ரொம்பவே வித்தியாசமானது. பெண்கள்னாலே நிறைய விஷயம் நம்ம மைண்ட்ல வந்துபோகும். ஆனால் யதார்த்தத்தில் பல விஷயம் அதுக்கு நேர்மாறாதான் இருக்கும்கிறதுக்குச் சில உதாரணங்கள்...

`பொண்ணுங்க இருக்கிற இடம் ரொம்ப சுத்தமா இருக்கும். எல்லாத்தையும் அடுக்கி நீட்டா வெச்சுருப்பாங்க'ங்கிறது பசங்க மென்டாலிட்டி. லேடீஸ் ஹேண்ட் பேக்கைத் திறந்து பார்த்தவங்களுக்கு மட்டும்தான் இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கைங்கிறது புரியும்.  இயர்போன் சிக்கலை எடுக்கிறதைவிட கஷ்டமான ஒரு விஷயம் இருக்குனா, அது பொண்ணுங்க ஹேண்ட்பேக்ல இருந்து ஒரு பொருளைத் தேடி எடுக்கிறதுதான். மிடியல!

பெண்கள் எப்பவுமே ஒரே குரூப்பா ஒற்றுமையா இருக்கிறதா தெரிஞ்சாலும், அதே குரூப்புக்கு உள்ளேயே ஒரு பொண்ணுக்கும் இன்னொரு பொண்ணுக்கும் எப்பவும் புகைஞ்சுகிட்டுதான் இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது எரிமலை மாதிரி உள்ளுக்குள்ளயே குமுறிக்கிட்டு இருந்த மொத்த கோபத்தையும் வெளிக்காட்டுவாங்க. அப்போ யார் சிக்கினாலும் சின்னாபின்னமாகிறது சங்கர் சிமென்ட் போல உறுதி. ஒருத்தீ!

பசங்க அளவுக்குப் பொண்ணுங்க சைட் அடிக்க மாட்டாங்கங்கிறது அடுத்த மித். வெறித்தனமா பார்க்கிறது பசங்களோட பழக்கம்னா... பத்தே செகண்ட் பார்த்துட்டு என்ன கலர் ட்ரெஸ், நடை எப்படி, மீசை கொஞ்சம் அடர்த்தியா இருந்திருக்கலாம்... இப்படிப் பல வகையான கருத்துகளை உதிர்க்கும் பெண்களோட திறமைக்கு நாங்க தலை வணங்குறோம். யாருகிட்ட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick