`அம்மணி' பாட்டியும் டப்ஸ்மாஷ் பேத்தியும்!

ணையத்தில் தினம் தினம் டப்ஸ்மாஷ் என்டர்டெயினர்கள் வலம் வரத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொண்ணும் ஒரு ரகம்னா செளபாக்கியாவின் டப்ஸ்மாஷ் தனி ரகம். வசனமே இல்லாத `மொழி' ஜோதிகா பெர்ஃபார்மன்ஸை     தன் டப்ஸ்மாஷில் பின்னிப் பெடலெடுத்திருக்கும் இந்த சேச்சியைத் தொடர்புகொண்டால், `` `விண்ணைத்தாண்டி வருவாயா' பார்த்துருக்கீங்களா அதுல த்ரிஷாவோட பாட்டியா நடிச்சது என்னோட பாட்டிதான். லஷ்மி ராமகிருஷ்ணனின் `அம்மணி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் இவர்தான்!'' என்று பாட்டியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். விடுமுறை தினத்தை எர்ணாகுளத்தில் கழித்துக்கொண்டிருந்த பாட்டி-பேத்தியுடனான ஒரு பேட்டி...

``டப்ஸ்மாஷ்  என்றாலே வசனத்தைத்தானே தேர்ந்தெடுப்பாங்க. நீங்க எப்படி இதைத் தேர்ந்தெடுத்தீங்க?''

``இதுவரை செஞ்ச டப்ஷ்மாஷ் எல்லாமே மூணு நிமிஷம் வரைக்கும் செஞ்சிருக்கேன். நிறைய டப்ஸ்மாஷ் பண்ணி இருக்கேன். அடிப்படையில நான் ஒரு டான்ஸர். எக்ஸ்பிரஷனுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன்.டப்ஸ்மாஷ்ல ஏன் இதை முயற்சி பண்ணக்கூடாதுன்னு தோணுனப்போதான் `மொழி' படம் ஞாபகத்துக்கு வந்தது. ஆனா இவ்வளவு பெரிய ரீச் ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

``குடும்பம் பத்தி சொல்லுங்க..?''

``கேரளாவில எர்ணாகுளம்தான் சொந்த ஊரு. அப்பா அம்மா ரெண்டு பேருமே சீரியல் ஆர்ட்டிஸ்ட். நான் இப்போ டான்ஸ்ல  முதுகலை முடிச்சுட்டு ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஆரம்பத்துல மலையாளத்துல சலீம்குமாரோட டப்ஸ்மாஷ் எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. வீட்டுலயும் உற்சாகப்படுத்துனாங்க. நான் மலையாளிதான். ஆனா நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick