இவான்காவைத் தெரியுமா? | Ivanka Trump life style - Timepass | டைம்பாஸ்

இவான்காவைத் தெரியுமா?

வான்கா - மொத்த உலகமும் கூகுளில் தேடு தேடு என கீபோர்ட் தேயத் தேடுவது இவரைத்தான். `பேரு பரிச்சயமில்லாததா இருக்கே!' - இதுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ். முழுப்பெயரைச் சொன்
னால் `சென்னை 28' பிரேம்ஜி போல `கபால்'னு கேட்ச் செய்துவிடுவீர்கள். இவான்கா ட்ரம்ப் - டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகள்.

மாடல், பிஸினஸ் உமன், ட்ரம்ப் ராஜ்ஜியத்தின் அதிகார மையம் என இவான்காவிற்குப் பல முகங்கள் உண்டு. டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் அவரின் முதல் மனைவியுமான இவானா ட்ரம்ப்பிற்கும் பிறந்த பியூட்டி குயின்தான் இவான்கா. தன் பெயரையே கொஞ்சம் மாற்றி மகளுக்கு வைத்தார் இவானா. மகளைப் போலவே இவானாவிற்கும் மாடல், ஆசிரியர், பிஸினஸ் உமன் எனப் பல முகங்கள் உண்டு. இவான்கா தன் அப்பா மாதிரி ரகளையான ஆள். 15 வயதிலேயே, `போர்டிங் ஸ்கூல் எல்லாம் ஜெயில் மாதிரி இருக்கு, என்னால அங்கெல்லாம் படிக்க முடியாது!' என கலாட்டா செய்து ஊர் விட்டு ஊர் மாறிய பெருமை இவான்காவிற்கு உண்டு.

ஸ்கூல், காலேஜ் முடித்தவுடன் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பின் அங்கிருந்து வைர வியாபாரம். மான்ஹாட்டனில் தங்கம், வைரம், வைடூரியம் ஜொலிக்கும் நகைக்கடை ஒன்றை வைத்திருந்தார். பின் அதையும் மூடிவிட்டுத் தன் அப்பாவின் நிறுவனத்தில் இணைந்தார். இப்போது ட்ரம்ப் குழுமத்தின் எக்ஸிக்யூட்டிவ் வைஸ் பிரசிடென்ட் இவான்காதான்!

பிசினஸ் தவிர்த்து மாடலிங்கிலும் இவான்காவிற்கு அதீத ஆர்வம். `டாமி ஹில்பிஹர்', `சசூன்ஸ்' போன்ற நிறுவனங்களின் மாடலாக இருந்திருக்கிறார். அழகிப்போட்டிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். `ஃபோர்ப்ஸ்', `அவென்யூ' போன்ற இதழ்களின் அட்டைகள் இவான்காவின் போஸ் தாங்கி வெளியாகியிருக்கின்றன. இதுபோக சின்னத்திரையிலும் நடுவராக இருந்து மார்க் போட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick