``கறிச்சோறு திங்க முடியாது!''

தித்யா சேனல்  காமெடியில் அனைவரையும் அசத்துபவர் அஸார். இவர் ஹீரோவாக நடித்த ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல' படம் திரைக்கு வர இருக்கிறது. ‘சின்னத்திரை டூ சினிமா’ பயணத்தில் இருந்தவரை இடையில் மடக்கி ‘குண்டக்க மண்டக்க’ கேள்விகள் கேட்டோம்...

‘`நல்ல குடிமகன்னா எப்படி இருக்கணும்?’’

``சனிக்கிழமையானா பாண்டிச்சேரி போய், 1500-ல இருந்து 2000 ரூபாய்க்குள்ள நல்ல ரூமா புக் பண்ணி, குடிக்காம ஊரை மட்டும் சுத்திப் பார்த்துட்டு வரணும்!''

‘`காதலியைக் கழற்றிவிடுவது எப்படி?’’

``இப்பல்லாம் பொண்ணுங்கதான் பசங்களை அதிகமா கழற்றி விடுறாங்க. அதனால, இந்தக் கேள்வியை பொண்ணுங்ககிட்டதான் கேட்கணும்.''

‘`புதுப் பொண்டாட்டிக்கு மல்லிகைப் பூவும் அல்வாவும் வாங்கிக் கொடுக்குறாங்களே... ஏன்?’’

``மல்லிகைப்பூ மாதிரி மணக்கவும், அல்வா மாதிரி ஸ்மூத்தாவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்..!''

‘`அதிகமா எப்போ டென்ஷன் ஆவீங்க?’’

``சில வருடத்துக்கு முன்னால் வெளிவந்த ஒரு படத்தை, வேற தலைப்புல, வேற நடிகர்கள் நடிக்க பார்ப்போமில்லையா... இல்லேன்னா, ஒரே கதையே வேற வேற நடிகர்கள் நடிப்புல ஒரே நாள்ல ரிலீஸாகும். இதுக்கு ஒரு 120 ரூபாய், அதுக்கு ஒரு 120 ரூபாய். அதுமட்டுமல்லாம பாப்கார்ன், பார்க்கிங்னு நம்மகிட்ட இருந்து நாலு நாள் சம்பளத்தைப் புடுங்குவாங்க பாருங்க... தூக்கி அடிச்சிடலாமானுகூட தோணும்! ''

‘`சரி... தியேட்டர்ல ஏன் பாப்கார்ன் விக்கிறாங்க?’’

``வேற எங்கேயும் விக்கிறதில்லை, அதான் தியேட்டர்லயாவது விக்குறாங்கனு நினைக்கிறேன்.''

‘`சமந்தா - எமி ஜாக்சன் ரெண்டு பேர்ல உங்க ஹீரோயின் சாய்ஸ் யார்?’’

``ரெண்டு பேரும் ஒண்ணா எங்கூட நடிக்கிறதுதான் என் சாய்ஸ். கண்ணா, ரெண்டு லட்டு தின்ன ஆசையா?'' 

‘`எந்த வண்டியில டிராவல் பண்றது பிடிக்கும்?’’

``என் வண்டில டிராவல் பண்றதுதான் பாஸ் பிடிக்கும். ஏன்னா, நான் அடிக்கடி வண்டியை நிறுத்துவேன், ஏசியை ஆஃப் பண்ணி, ஆன் பண்ணி விளையாடுவேன். அடுத்தவங்க வண்டியா இருந்தா, நடுரோட்ல இறக்கிவிட்டுருவாங்க. என் வண்டினா எதுவும் சொல்ல முடியாதே! ''

‘`சாவுக்குத்துக்கு ஆடியிருக்கீங்களா?’’

``எனக்குத் தெரிஞ்ச ஒரே டான்ஸ் அதுமட்டும்தான். நாக்கை மடிச்சிகிட்டு, கைலியைத் தூக்கிக் கட்டிக்கிட்டு ச்சும்மா... டண்டணக்கா... டணக்குணக்கா...''

‘`நடிகர்கள் லிப்ஸ்டிக் போடுறதைப் பார்த்தா என்ன தோணும்?’’

``லிப்ஸ்டிக் விலையை எக்கச்சக்கமா ஏத்திடலாமோணு தோணும்.

‘`நாய் ஏன் நன்றியோட இருக்கு?’’

``அதுவாவது நன்றியோட இருக்குதே... அதைப் போட்டு ஏன் கிண்டணும்... கெளறணும்? அப்புறம், நாய்க்கடினால 40 நாளைக்கு கறிச்சோறு திங்க முடியாது. அது தெரியுமா உங்களுக்கு?''

- சி.காவேரி மாணிக்கம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick