சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்

சினிமால்

 சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தில் நயனின் வயது குறைவாகத் தெரியவேண்டும் என்பதற்காக கேரளாவில் ஸ்பெஷல் ஆயூர்வேத சிகிச்சை முடித்து வந்திருக்கிறார் நயன். கோபி இயக்கத்தில் `அறம்' படத்தின் படப்பிடிப்பை 25 நாட்களில் முடித்துவிட்ட நயன், தற்பொழுது பெங்களூரில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் `இமைக்கா நொடிகள்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். #தாரா தாரா நயன்தாரா! 

 நடிகைகளைப் பற்றிக் கேட்டாலே ஜாலியாகப் பேசும் ஜெயம்ரவி, இப்போது, செம கடுப்பாகிவிடுகிறார். `என்னைப் பற்றிக் கேளுங்கள் சொல்லத்தயாராக இருக்கிறேன்' என்று கறாராகப் பேசிவிடுகிறார். அதுமட்டுமின்றி இயக்குநருக்காக கதையை `ஓகே' செய்யும் வேலையும் இனி இல்லையாம். கதையை முழுமையாக கேட்ட பிறகுதான் ஓகே சொல்கிறார். கதை பிடிக்கவில்லையென்றால் ஓப்பனாக, `முடியாது' என்றும் சொல்லிவிடுகிறார். ஏனென்றால் இயக்குநரை அலைய வைக்கக் கூடாது என்ற நல்லெண்ணமாம். #வளர்ந்த நடிகர்னா அப்படித்தான்!

 `புலி', `தெறி' படங்களுக்கு பிரம்மாண்டமாக இசைவெளியீட்டு விழா நடந்தது. ஆனால் `பைரவா' படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை சிம்பிளாக முடித்துக்கொள்ளலாம் என்று கன்டிஷன் போட்டிருக்கிறார் விஜய். நிகழ்ச்சிகள் ஏதுமில்லாமல் யூ-டியூப்பிலேயே வெளியிடத் திட்டம். ஏனென்று விசாரித்ததில் ஜெயலலிதா, சோ என்று தொடரும் சோகமும், பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் நாட்கள் குறைவாக ருப்பதும்தான் காரணம். #வர்லாம் வா பைரவா! 

 `மாவீரன் கிட்டு' படத்தின் மூலம் ரசிகர்களையே கிடுகிடுக்க வைத்துவிட்டார் சுசீந்திரன். ஒவ்வொரு படத்திற்கும் வெரைட்டியான கதைகளைத் தரும் சுசீந்திரன் அடுத்ததாக, சந்தீப் கிஷன், ஹரீஷ் உத்தமன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் படம் ஒன்றை இயக்கிவருகிறார். அதற்கான படப்பிடிப்பு பட்டினப்பாக்கத்தில் தற்பொழுது நடந்துவருகிறது. முழுக்க முழுக்க வேறு ஓர் கதைத்தளம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அறிமுகப் படமான `வெண்ணிலா கபடி குழு' இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதி தயாரிக்க இருக்கிறார். ஆனால் அப்படத்தை அவரின் உறவினர், செல்வசேகர் இயக்கவிருக்கிறார். #சூப்பர் சுசி!

 அடுத்ததாக யார் படத்தில் விக்ரம் நடிப்பார் என்று பெரிய இயக்குநர்கள் முட்டிமோதிக்கொண்டிருக்கும் போது, அசால்ட்டாக `வாலு' பட இயக்குநர் விஜய் சந்தருடன் கமிட்டாகினார். அமெரிக்காவிலிருந்து விக்ரம் திரும்பியதும் விஜய் சந்தர் படத்தில் முழுவீச்சில் நடிக்கவிருக்கிறார். தற்பொழுது இயக்குநர் நடிகை தேடும் வேட்டையில் இருக்கிறாராம். கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யவும் திட்டம். #சீக்கிரம் சியான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick