ரஜினி ரஜினியாகவே...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஜினிகாந்தாகவே நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்  டைம்பாஸ் மற்றும் ரஜினி ரசிகர்களுக்காக...

பாவத்தின் சம்பளம் : துரை இயக்கிய இத்திரைப்படம், சங்கர் கணேஷ் இசையமைத்து 1978-ல் வெளிவந்தது. ஆர். முத்துராமன், பிரமிளா, சுமித்ரா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில், ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 

நட்சத்திரம் : தாசரி நாராயண ராவ் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில் 1980-ல் ஸ்ரீப்ரியா, மோகன் பாபு லீடிங் ரோலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இது. இதில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி, சாவித்ரி, நாகேஷ், கமல்ஹாசன், கே.ஆர்.விஜயா, மஞ்சுளா, ஸ்ரீவித்யா போன்ற பல நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். அனைவரும் நடிகர்களாகவே வருவார்கள்.

நன்றி, மீண்டும் வருக : மௌலி இயக்கத்தில், ஷியாம் இசையில், பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் 1982-ல் வெளியான திரைப்படம். பிரதாப் கே. போத்தன், சுஹாசினி, ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் இவர் பிரதாப்பிடம், ‘வாழ்க்கையில் மேலே போவதற்கு ஒரு பிடிப்புபோல் இருப்பதுதான்டா மேரேஜ்’ என்று சொல்லும் பன்ச் மிக ஃபேமஸ். ரஜினியுடன் சேர்ந்து ஜெயசித்ரா, ராதிகா, பூர்ணிமா ஜெயராம், சாருஹாசன், தேங்காய் சீனிவாசன், சில்க் போன்றவர்களும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

அக்னி ‌சாட்சி : கே.பாலச்சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 1982-ல் வெளியான திரைப்படம். சிவக்குமார், சரிதா இப்படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இதில் ரஜினியுடன் இணைந்து கமல்ஹாசனும் நடிகராகவே நடித்துள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தாலும் சரிதா, இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம் விருதைப் பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick