ஆஃப் த ரெக்கார்டு! | Cinema gossips - Timepass | டைம்பாஸ்

ஆஃப் த ரெக்கார்டு!

தொடரும் விவாகரத்து சங்கதிகளால் கலங்கிப்போய்  இருக்கிறது சினிமா வட்டாரம். இந்நிலையில் கேரளத்து மல்லிகை மீண்டும் நடிக்க வந்தது, அவரது கணவருக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மனகசப்பு விவாகரத்து வரை யோசிக்க வைத்திருக்கிறதாம்!

பட வாய்ப்பு இல்லாததால், தமிழில் ஓர் சேனலில் நிகழ்ச்சி நடுவராக இருக்கிறார் ரெண்டெழுத்து நாயகி. இவருக்குத் தமிழில் வாய்ப்பு  கிடைக்காததற்கு சிலர் கிளப்பிவிட்ட வதந்தி தான் காரணமாம். நல்ல கதைகளில் நடிக்க விருப்பம் இருப்பதாக மீடியாக்களுக்கு போன் போட்டு சொல்லி வருகிறார் நாயகி.

மூன்று முறை இணைந்த ஆனந்தமான நடிகையோடு நெருக்கமாக இருக்கிறாராம் இசை. அன்புப் பரிசாக வீடு ஒன்றைக் கட்டி வருவதாக வதந்தி உலாவுகிறது! 

`எனக்கு கேரக்டர் ரோல் கொடுத்து கேரியரைக் காலி செய்கிறார்கள்' என எல்லோரிடமும் புலம்பி வருகிறார் `காதலில் விழுந்த' மூன்றெழுத்து நடிகை. `இனி கவர்ச்சிதான் ஒரே வழி!' என களத்தில் இறங்கத் தயாராகிவிட்டாராம்!

யானை நடிகைக்கு இப்போது மார்க்கெட் செம டல். யானை படத்தின் இரண்டாம் பாகத்திலாவது கம்பேக் கிடைக்குமா என்று இயக்குநரிடம் தூதுவிட்டுப் பார்த்தாராம் நடிகை. `புதுமுக நடிகையைத் தான் அதில் நடிக்க வைக்கப் போகிறேன்!' என்று சொல்லிக் கடையை சாத்திவிட்டாராம் இயக்குநர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick