‘காக்கா ஓட்ட மாட்டேன்!’ | Facebook Atrocities - Timepass | டைம்பாஸ்

‘காக்கா ஓட்ட மாட்டேன்!’

சில பேர் ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸுங்கிற பேர்ல போடுற மொக்கை ஒரு பக்கம் டார்ச்சர்னா `அக்கவுன்ட்டை  டீஆக்டிவேட் பண்ணப்போகிறேன் ஃப்ரெண்ட்ஸ்'னு சில பேர் பண்ணுற அக்கப்போர்கள்லாம்... ரொம்பக் கஷ்டம்.

`முக்கியமான வேலையாகச் செல்கிறேன்.  திரும்ப வருகிறேன் வெயிட் பண்ணுங்க அதுவரைக்கும்!'னு பீலாவிடுறவங்களைக்கூட மன்னிச்சு விட்டுடலாம். அதுல போயி, `இந்த மக்களையும் மண்ணையும் விட்டுட்டுப் போயிடாதீங்க!' ரேஞ்ச்ல கமென்ட் பண்ணுவாங்க பாருங்க. ஆத்திரங்கள் ஆத்திரங்களா வருது மக்களே!

போடுற ஸ்டேட்டஸை யாருமே கவனிக்கலைனா `ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுகிறேன் ஃப்ரெண்ட்ஸ்'னு ஸ்டேட்டஸ் போடுவாங்க. நம்ம பயலுக சும்மா இருப்பாங்களா அதுவரைக்கும் அந்த புரொஃபைல் பக்கமே போகாதவன்லாம் அங்கே போய்,  `இன்னும் நீங்க போகலையா'ங்கிற ரேஞ்சுல கமென்ட் பண்ணி ஆல்ரெடி சூடா இருக்கிறவன் மேல சூடத்தைக் கொளுத்திப்போட்டு குளிர் காய்வாங்க. என்னா ஒரு வில்லத்தனம்!

வித்தியாசமா சில புரொஃபைல்ல இருந்து `ஐ யம் பேக்' னு ஸ்டேட்டஸ் வந்து விழும். இவிங்களாம் எப்போ போனாங்க, எப்போ வந்தாங்கங்கிறதே நம்மளுக்கெல்லாம் சத்தியமாத் தெரியாது. வருவாங்க ஆனா வரமாட்டாங்க!

சில பேர் `டீ ஆக்டிவேட் பண்ணுறேன்'னு மதியம் சொல்லிட்டுப் போற குரூப் ஈவ்னிங் ஆகுறதுக்குள்ளேயே திரும்பி  வந்துடுவாங்க. ஏன் எதுக்குனு ரீசனே கேக்கலைனாலும்  ஈவ்னிங் வரைக்கும் ஃபேஸ்புக்ல இருக்க மாட்டேன்ங்கிறதைதான் அப்படிச் சொன்னேன்னு விளக்கம் வேற வந்து கொடுப்பாங்க. இவங்கள்லாம் தெரிஞ்சு பண்ணுறாங்களா இல்லை தெரியாம பண்ணுறாங்களாங்கிறதுதான் நமக்குத் தெரியலை. ரெண்டரைமணி நேரம் போயிட்டு வர்றதுக்கு பேரு டீ ஆக்டிவேட்டாயா? கெரகத்த!

தன்னைத் தேடப்போறது இல்லைங்கிறது தெரிஞ்சும் டீஆக்டிவேட் பண்ணப்போறவங்க பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே. அதை என்னத்துக்கு ஸ்டேட்டஸ் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க, 99 days of freedom ங்கிற போட்டோவை புரொஃபைல் பிக்சராய் வெச்சுக்கிட்டு டெய்லி வந்து இங்கே ஏன் சுத்திக்கிட்டு இருக்கிறாங்கங்கிற தெல்லாம் தெரியலை, அறியலை, புரியலை! புரியலை ஐயா!

இம்புட்டு சீன் போட்டுட்டு  நிஜமாகவே டீஆக்டிவேட் பண்ணிட்டுப்போனாலும் வேற ஒரு ஃபேக் ஐ.டி-யில வந்து அந்த டீஆக்டிவேட் ஸ்டேட்டஸுக்கு எவ்வளவு ரெஸ்பான்ஸ் வந்திருக்குனு சத்தமில்லாம உளவு பார்க்குறீங்களே... அதுக்கு என்னாத்துக்கு டீ ஆக்டிவேட் பண்ணணும்? சும்மாவே இருந்துருக்கலாம்ல!

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick