அன்றே பாடினார் தேவா!

காசிமேட்டுல ஆரம்பிச்சு கண்ணம்மா பேட்டை வரைக்கும் சென்னையோட எந்த ஏரியா பற்றித் தெரிஞ்சிக்கணும்னாலும் யூ-டியூப்ல `தேவா ஹிட்ஸ்'னு சர்ச் பண்ணி அவர் பாட்டு எல்லாத்தையும் கேட்டா போதும்... ஆனா தேவா சாங்ஸ்ல வர்ற லிரிக்ஸுக்கும் சென்னையில் இருக்கிற ஏரியாவுக்கும் உண்மையாகவே ஏதாவது தொடர்பு இருக்கானு யோசிச்சுப் பார்த்தா...

 `நினைவிருக்கும் வரை' படத்துல `காத்தடிக்குது காத்தடிக்குது' பாட்டுல `காசிமேட்டு காத்தடிக்குது'னு வரி வரும். உண்மையாகவே காசிமேட்டுல அந்த அளவுக்குக் காத்தடிக்குதானு கூகுள் மேப்புல தேடி பார்த்தா... சென்னையில் வந்த முக்கால்வாசி புயலோட தாக்கம் கன்னாபின்னானு காசி மேட்டையும் தாக்கியிருக்கு.

 அஜித் நடிச்ச `நேசம்' படத்துல `குன்றத்துல கோவிலு கட்டி'னு ஒரு பாட்டு வரும். அப்படி அந்தப் பாட்டுல வர்ற மாதிரி குன்றத்துல எதும் கோயில் இருக்கானு தேடிப்பார்த்தா... அந்த ஏரியா ஃபுல்லா நிறையக் கோயில்  இருக்கு. அப்போ கண்டிப்பா அஞ்சலைக்கு கட்டின கோயிலும் அங்கேதான் இருக்கும்.

 `அண்ணாநகர் ஆண்டாளு, அயனாவரம் கோவாலு'ங்கிற பாட்டுல இருக்கிற ஆண்டாளும், கோவாலும் அங்கேதான் இருக்காங்களானு தெரியாது. ஆனா அண்ணா நகர்ல ஆண்டாளுங்குற பேர்ல நிறையக் கடைகள் இருக்கு. இந்த கோவாலுதான் யாருனு தேடிக்கிட்டு இருக்கோம்.

  `காதலே நிம்மதி' படத்துல `விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி' பாட்டுல `செளத் உஸ்மான் ரோட்டுல கலர் கலரா கவரிங் நகை வாங்கித் தருவேன்'னு பாடுவார். அந்தப் பாட்டுல வர்றது எல்லாம் அப்படியே உண்மைதான். இப்ப செளத் உஸ்மான் ரோடு ஃபுல்லா எல்லாமே கவரிங் கடைதான். கலர் கலரா வாங்குங்க, கவரிங்கோட போய் காதல் பண்ணுங்க.

 `வெற்றிக் கொடிகட்டு' படத்துல `சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா' பாட்டுல  `மயிலாப்பூர் ஆன்ட்டிகிட்ட கத்துக்கடா டியூஷனு'னு ஒரு வரி வந்திருக்கும். இதுல இருந்து நம்ம தேவா அண்ணன் என்ன சொல்ல நினைக்கிறார்னா `பத்தாவது, பன்னிரெண்டாவது படிக்கிற எல்லாரும் கண்டிப்பா மயிலாப்பூர்லதான் டியூஷன் கத்துக்கணும்'னு சொல்றார். போய் புள்ளகுட்டிங்களை படிக்க வைங்க ஃப்ரெண்ட்ஸ்.

 தேவாவோட ஹிட்ஸ்ல முக்கியமான இன்னொரு பாட்டுதான் `கொத்தவால் சாவடி லேடி... நீ கோயம்பேடு வாடி'. ரெண்டுக்கும் என்ன தொடர்புனு பார்த்தா, ஒண்ணுமே இல்லை பாஸூ. ரெண்டுக்கும் இடையில் பத்து கிலோமீட்டர் இருக்கு. நடந்தா உடம்புக்கு நல்லதுனு சொல்றார் போல.

மொத்தத்துல கூகுள் மேப் சரியா வொர்க் ஆகலைனா தேவா சாங்ஸ் கேளுங்க ஃப்ரெண்ட்ஸ். டாட்.

- லோ.சியாம் சுந்தர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick