சினிமா விடுகதை! | Cinema Riddles - Gana Bala - TimePass | டைம்பாஸ்

சினிமா விடுகதை!

சையமைப்பாளர் தேவாவுக்குப் பிறகு  கானாப் பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்ட கானா பாலா பாடிய பாடல்கள்தான் பாஸ் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள்.

1.  படத்தின் தலைப்பில் சாலை இருக்கும்.  இனிஷியல் இசையமைப்பாளர் போட்ட மெட்டில் குத்துப்பாட்டுக்கான சில வேலை இருக்கும். ஆக்சுவலி இது காதல் சோகப்பாட்டு. நம்புங்க பாஸ். அப்புறம் சொல்லுங்க பாஸ் என்ன பாட்டுனு?

2. அடையாளம் காட்டிய பாட்டு. வாழ்ந்த இடத்திலிருந்து வந்த பாட்டு என்பதால் ஒரிஜினாலிட்டி குறையாமல் வந்து ஓட்டுகளை அள்ளியது. படத்தின் தலைப்பில் ஆயுதம் இருக்கும். ஆனா மொக்கை ஆயுதம். நீங்க பாட்டைச் சொல்லுங்க பாஸ்?

3.
இப்பவும் ஏ டி எம் முன்னாடி நின்னு இந்தப் பாட்டைத்தான் மக்கள் முணுமுணுத்துக்கிட்டு இருக்காஙக. ரிப்பீட்டட் வரியிலே ஹிட் தட்டிய பாட்டு நீங்களும் ரிப்பீட்டு பண்ணுங்க. என்ன பாட்டு?

4. லவ் புரோபோஸ் பண்ண முடியாதவன் வேதனையை இதைவிட அழகா யாராலையும் சொல்லிட முடியாது. நக்கலும் நையாண்டியுமாய் தமிழ்நாடே பாடியதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் பாலா. என்ன பாட்டு பாஸ்?

5. மேடைப்பேச்சு நடுவுல கொடுக்கிற பானம்தான் படத்தின் தலைப்பு. சிறுவனின் காதலுக்குக் கொடி கட்டிய பாட்டு, தமிழும் இங்கிலீஷும் கலந்துகட்டி ஃபேமஸானதே... என்ன பாட்டு?

6. தனி ஒருவன் நிமிர்ந்து நின்ற பாட்டு. என்ன நடந்தாலும் கவலைப்படாதே சந்தோசமா இருங்கிற தத்துவத்தைதான் குத்துவமா சொன்ன பாட்டு என்ன பாட்டு பாஸ்?

7.
தலைப்பு ஊர்ப் பேர் சொல்லும். படத்தின் கதை மக்களின் வாழ்க்கையைச் சொல்லும்.  பாட்டோ பல்ப் வாங்கின ஹீரோவுக்கு ஆறுதல் சொல்லும். பாட்டை நீங்க சொல்லுங்க?

8. குரலும் பாடல் வரிகளும் ஒருலெவல். இசையோ வேறு லெவல். இரண்டும் மிக்சிங்காகும்போது கிடைப்பதோ மாடர்ன் வெஸ்டர்ன் கானா. அமுல்பேபி ஹீரோவுக்கு பொருந்தாத குரல்னாலும் காலை ஆட்டி ரசித்த கானாதானே பாஸ். என்ன பாட்டு?

- கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick