செல்போன் சேட்டைகள்!

ம் வாழ்க்கையில் ஓர் அங்கமான மொபைல் இன்னும் என்னவெல்லாம் சேட்டைகள் செய்கிறது என்று உற்றுக் கவனித்தால்...

* ஓர் அழகான இடத்துக்குச் சென்றால் அதன் அழகைப் பார்த்து ரசிக்கும் சுகமே தனி. ஆனால், இப்போது ஓர் இடத்தின் அழகைக் கண்களால் கண்டு ரசிப்பதைவிட மொபைல் கேமரா வழியே பார்ப்பது அதிகமாகிவிட்டது. உடனே பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்து ‘கச்சக்’ என்று ஒரு க்ளிக்அல்லது செல்ஃபி.

* முன்பெல்லாம் நண்பன் சொந்த ஊருக்கு வரும்போது சந்தோஷமாக போன் கால் வரும். ‘மச்சி, இந்த வாரம் ஊருக்கு வர்றேன்டா’னு ஏரியாவுக்கே கேட்கிற மாதிரி கத்திச் சொல்வான். ஆனால், இப்போதெல்லாம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கு. காலம் கெட்டுப் போச்சு பாஸ்!

* வெகு நாட்கள் கழித்து வெளியூரிலோ ரோட்டிலோ ஒரு நண்பனைச் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வார்கள்? ‘எப்படி நண்பா இருக்க? வீட்டில் நல்லா இருக்காங்களா? உன் போன் நம்பர் கொடுடா. மிஸ் பண்ணிட்டேன்’னு கேட்டு வாங்கிய காலம் போய், இப்போதெல்லாம் பாக்கெட்டில் இருக்கும் மொபைலை எடுத்து க்ளிக் செய்து யார் அதை முதலில் ஃபேஸ்புக்கில் அப்லோட் பண்றாங்கனு போட்டி வேறு.

* வெளியில்தான் இப்படியென்றால் வீட்டில் அதற்கு மேல். அப்பா தன் மகனுக்கு போன் பண்ணி, ‘சீக்கிரம் வாடா. வந்து சாப்பிடு’ என்று சொன்ன பிறகு மாடியில் இருந்து இறங்கி வருகிறான் மகன். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்கிறது. காலக்கொடுமை கதிரவா!

* ஒரு படம் பார்க்க என்ன செய்ய வேண்டும்? தியேட்டருக்குப் போய் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதுதானே வழக்கம். இப்போதெல்லாம் படத்துக்குப் போறதுக்கு முன்னாடியே ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடப்படும். சரி, படம் பார்ப்பதற்கு முன்னால்தான் இப்படியென்றால் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மொபைலை நோண்டுவது, ட்வீட் இடுவது என்று ஏகப்பட்ட அட்ராசிட்டிஸ்!

* `செல்ஃபிமேனியா' - இப்போது நிறைய மக்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. ரோட்டில் விபத்து நடந்தால் செல்ஃபி, யாராவது இறந்துவிட்டால் செல்ஃபி, ஆபத்தில் ஒருவன் சிக்கிக்கொண்டால் செல்ஃபி, தூங்கும்போது மட்டும் செல்ஃபி எடுக்காம இருப்பீங்களா பாஸ்? ஆனால், கனவில் செல்ஃபி எடுப்பீங்க.

*  பஸ்ஸில் போய்க்கொண்டு இருக்கும்போது காதில் ஹெட்செட் ஒன்று அணிந்துகொண்டு மொபைலையே பார்த்துக்கொண்டு இருந்தார் ஒருவர். ‘சரி, பாட்டு எதுவும் கேட்பார் போல’ என்று நினைத்து நன்றாகக் கவனித்துப் பார்த்தால் லைவ்வில் டி.வி பார்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போ கேபிள் கனெக்‌ஷன்லாம் வேஸ்ட்டா?

*  பொதுவாக நாம் யார்மீதும் கோபம்கொண்டால் நேராகச் சென்று சட்டையைப் பிடித்து என்ன என்று கேட்போம். இப்போதோ உச்சகட்ட கோபமாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ப்ளாக் பண்ணுவதுதான். கேட்டால் சிரிப்புதான் வருகிறது. அதையும் மீறி இப்போதெல்லாம் சோகமாக இருந்தால் வாட்ஸ் அப்பில் டி.பி-யை எடுத்து சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- தார்மிக் லீ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick