`எலி'மையான ஹோட்டல்!

நீங்க எத்தனையோ ஊருக்குப் போயிருப்பீங்க, எத்தனையோ நாட்டுக்கு போயிருப்பீங்க. அங்கே எத்தனையோ உணவகங்களைப் பார்த்திருப்பீங்க. ஆனால் இப்படி ஒரு உணவகத்தை எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க. கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. அப்படி என்னப்பா உணவகம்? இது எலிகளுக்கான ஸ்பெஷல் உணவகம் பாஸ்!

 ஸ்வீடன் நாட்டில்தான் இருக்கு இந்த உணவகம். அங்கே இருக்கும், `அனானிமௌஸ்' (Anonymouse) என்ற கலைக்குழு இந்த உணவகத்தை உருவாக்கியிருக்காங்க!

இந்தக் குழு அப்படியே ஒரு பெரிய உணவகத்தோட மினியேச்சரை அழகா உருவாக்கி அசத்தி இருக்காங்க.  அப்படியே ஒரு அசல் உணவகம் போலவே காட்சியளிக்கும் இந்த எலிகள் உணவகம் 25 இன்ச் நீளமும் 12 இன்ச் உயரமும் கொண்டது. `மல்மோ' (Malmo) என்ற நகரத்தில் இருக்கும் இந்த உணவகத்துக்கான நோக்கம் ஜீவகாருண்யமாம்!  இந்த உணவகத்தில் எலிகளுக்குப் பிடிச்ச உணவு எல்லாம் வரிசை கட்டி அடுக்கி வெச்சிருக்காங்க. பாதாம், பிஸ்தா போன்ற `நட்ஸ்' வகைகளும், விதவிதமான வெண்ணை வகைகளும் எலிகளுக்காக தயார் செஞ்சு வெச்சிருக்காங்க.

இது என்னடா அக்கப்போரா இருக்கு. நம்ம ஊர்ல எலிகள் வந்தா பாய்சனைத்தானே வெப்போம். ஆனால் இந்த ஊர்ல பாதம், பிஸ்தாலாம் வைக்கிறாங்க.

`அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவரே...'னு பாடத் தோணுதா பாஸ்?

- முரளி.சு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick