எல்லாம் சின்னதாவே தெரியுதே! | Daily Facing Small Problems - Timepass | டைம்பாஸ்

எல்லாம் சின்னதாவே தெரியுதே!

ப்பொழுது... நான்... இங்கே... (அரசியல் வேணாம்) சரி சரி உளறப்போவது `பகவதி' படத்துல வர்ற சின்னப் பகவதி காமெடி பத்திதான். `டேய் அது பழைய காமெடிடா!'னு சொல்றீங்களா? என்ன பண்றது... பழசே பரவாயில்லை சில நேரங்களில்! இப்படி `சின்னச் சின்ன' என்ற வார்த்தைகள் எங்கேயாவது கேட்கும் சூழல் வந்தால் உடனே தப்பித்துக் கொள்ளவும்! கண்டிப்பா பெரிய ஆப்பாகத்தான் இருக்கும் மக்களே! அதன்படி `சின்ன' அட்வைஸ்கள் பாப்போம்...

 மார்னிங் டைம் அவசர அவசரமா சாப்பிடாம கிளம்பும் போது நம் தாய், (அப்படித்தான் கூப்பிடணும் இனிமே) `டேய்... சின்ன இட்லிதான்டா சாப்பிட்டுட்டுப் போடா!'னு சொன்னா, பார்க்கவே பார்க்காம கிச்சன் உள்ள போய் அரை சொம்பு தண்ணி குடிச்சிட்டு அப்பீட் ஆகிடுங்க. சின்ன இட்லி ஏன் வந்துச்சுன்னா உளுந்து பத்தாமத்தான் ஒறவுகளே! 

 ஆபீஸ்ல எவனாவது, `வர்ற ஞாயிறு சின்ன ரைடு போயிட்டு வரலாம்னு இருக்கேன் வர்றியா?'கேட்டா உடனே அங்கே இருக்கவே வேணாம். ஷேர் ஆட்டோ பிடிச்சி வீட்டுக்குக் கிளம்பி வந்துடுங்க. சொந்தமா அந்த மனுஷன்ட `பைக் இருக்கா?'னு கேளுங்க... சின்ன ரைடாம்!

 அப்படி வீட்டுக்கு வந்தவுடனே உங்க ஆளு போன் பண்ணும். `டேய் எங்கே இருக்கே? எங்க வீட்டுல சின்ன ப்ராப்ளம்டா'னு! நீங்க, `இனிமே சீலிங் உடைந்து விழுந்துடிச்சு, நான் வாங்கித் தந்த ஐபோன் ரசத்துல விழுந்து அவிஞ்சி போச்சி அப்படினா மட்டும் கால் பண்ணு'னு சொல்லி கட் செஞ்சிடுங்க... சின்ன ப்ராபளமாம்ல! சரி நான் எப்போ ஐபோன் வாங்கித் தந்தேன்?

 சரி ரெஸ்ட் எடுக்கலாம்னு போகும் போது பக்கத்து வீட்டுப் பையன் வருவான். `அண்ணே... சின்ன விளையாட்டு விளையாடலாம் அண்ணே'னு! தம்பி, `இந்த அண்ணன் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எரிதல் மட்டும்தான் விளையாடுவேன்'னு சொல்லி போர்வையைப் போத்திகோங்க... `சின்னதா கால்குலஸ் கணக்கை சால்வ் பண்ணித் தாங்க'னு வர்றவய்ங்களைப் பார்த்தா அப்படியே அப்பீட் ஆகிக்கோங்க. நமக்கு மானம்தான் பெரியது!

 கடைசியா தூங்கலாம்னு முடிவெடுத்தா ஆபீஸ்ல இருந்து மெசேஜ் வரும். `நாளைக்கு மதியம் சின்ன மீட்டிங் இருக்கு. நீங்க அவசியம் பவர் பாயின்ட் பிரசன்டேஷனோட வரணும்!'னு சொல்லி இருப்பாங்க. ஏன்யா அதைக் காலையில சொல்லி இருக்கலாம்ல...  நான் இனி தூங்குவேனா? சரி தூக்கம் வர்றதுக்கு மேகி சாப்பிடலாம்னு முடிவெடுத்தா, மேகி `சின்ன' பாக்கெட்தான் இருக்கும்!

- க.மணிவண்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick