``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!''

ழகாகத் தமிழ்பேசும் துறுதுறு நடிகை ப்ரியா ஆனந்த். சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் `கூட்டத்தில் ஒருவன்', மலையாளத்தில் `எஸ்ரா' படங்களை முடித்துவிட்டார். சென்னைக்கு அப்பால் கோவா, டெல்லி என ஷூட்டிங் பிஸியில் இருந்தவரிடம் கொஞ்சம் ஜாலி அரட்டை!

``வீட்டுக்கு ஒரே பொண்ணு நான். அம்மா, அப்பா இதுவரை எனக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிச்சதில்லை. தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, பெங்காலி, இங்கிலீஷ்னு பல மொழிகள் சரளமா பேசுவேன். ஏன்னா, சும்மா இருக்காம எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன். மாடலிங்ல பிஸியா இருந்தப்போ, சினிமா ஆசையெல்லாம் அவ்வளவா இல்லை. அப்புறம் சினிமா பிடிச்சுப் போச்சு. அதுக்காக, எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் பண்ணக்கூடாதில்ல... நல்ல வாய்ப்புகளை மட்டும் டிக் பண்ணிக்கிட்டு இருக்கேன்!'' கியூட் வரிகளை அடுக்குகிறார் ப்ரியா.

`` `கூட்டத்தில் ஒருவன்'ல நீங்களும் அப்படித்தானா?''

``ஆங்... படத்துக்கு நான்தான் ஹீரோயின். நார்மலான கமர்ஷியல் படம் மாதிரி இல்லாம, ஸ்வீட்டான மெசேஜ் கொடுத்திருக்கார் இயக்குநர். பள்ளி, கல்லூரியில கடைசி பென்ச் இல்லைனா, நல்லா படிக்கிற முதல் பென்ச் பசங்க இல்லை. ஆனா, தமிழ்ல முதல் பென்ச் பசங்களைப் பற்றிய படங்கள்தான் அதிகம் வந்திருக்கு. இந்தப்படம் அதை மாத்தும். திட்டக்கூட தோணாத, `ஐயோ பாவம்' பசங்களோட ஏரியாவை அவ்ளோ அழகா படமாக்கியிருக்கார் இயக்குநர் ஞானவேல். என் கேரக்டர் பெயர் ஜனனி. ஸ்கூல் டாப்பர். டான்ஸ், படிப்பு, விளையாட்டுனு எல்லாத்துலேயும் டாப்பர். எனக்கும், எதையுமே முயற்சி பண்ணாம இருக்கிற ஆவரேஜ் பையனுக்குமான கதை... நினைச்சுப் பார்த்தாலே இன்ட்ரஸ்டிங்கா இருக்கில்ல?''

``படத்துல ஓகே. நிஜத்துல எப்படி?''

``அதை ஏன் கேட்குறீங்க? இந்தக் கதையைச் சொன்னதுமே, எங்க வீட்டுல விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ஏன்னா, நான் படிக்கப் பிடிக்காமத்தான் ஸ்கூல் முடிச்சேன். சிலநேரம் எல்லாம் ரொம்பக் கட்டாயப்படுத்தி ஸ்கூலுக்கு விரட்டிவிடுவாங்க. பொதுவா எல்லாக் குழந்தைகளுக்கும் 5வது படிக்கிறவரைக்கும்தானே ஸ்கூலுக்குப் போகாம அடம்பிடிக்கிற பழக்கம் இருக்கும். எனக்கு, காலேஜ் போறவரைக்கும்கூட இருந்துச்சு! எங்க அம்மாதான் பாவம்! ''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick