சினிமால்

திருமணப் பரபரப்புகளுக்கு இடையிலும், வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் சமந்தா. தமிழில் `இரும்புத் திரை', `அநீதிக்கதைகள்', தெலுங்கில் மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக் படம் என... ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கிறார். #சமத்து!

வருடத்திற்கு இரண்டு படமாவது கொடுத்துவிடவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர் சூர்யா. `24' படத்தைத் தொடர்ந்து, `சிங்கம் 3' இந்த டிசம்பரில் ரிலீஸாக இருந்தது. முதலில் 16-ம் தேதி என அறிவித்து பின்னர் 23-ம் தேதிக்கு மாற்றினார்கள். இப்போது, `சிங்கத்தின் கர்ஜனை பொங்கலுக்குத்தான்' என முடிவெடுத்திருக்கிறார்கள். அரசியல் சூழல், இயற்கைச் சூழல், பணப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள்தான் இந்த முடிவுக்குக் காரணமாம். #பசிச்சா மட்டுமே திங்கிற சிங்கமாச்சே!

இந்த வருடம் எக்கச்சக்க படங்கள் ரிலீஸாகிவிட்டதால், தயாராக இருக்கும் தனது படங்களை அடுத்த வருடம் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் விஜய்சேதுபதி. ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் `புரியாத புதிர்', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் `கவண்', சீனுராமசாமி இயக்கத்தில் `இடம் பொருள் ஏவல்' ஆகிய மூன்று படங்களுமே டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். விஜய் சேதுபதியின் ஆறு படங்கள் இந்த ஆண்டு வெளியாகிவிட்டதால், இந்த முடிவு! #...ப்பா!

`நிமிர்ந்து நில்' படத்திற்குப் பிறகு சமுத்திரகனி மீண்டும் ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தது. அடுத்தடுத்து ஜெயம் ரவி பிஸியாகிவிட்டதால், தானே நடித்து, தயாரித்து, இயக்கும் `தொண்டன்' படத்தில் பிஸியாகிவிட்டார் சமுத்திரக்கனி. #தொண்டர்களின் குரல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick