இவங்க யாரு... என்ன பண்ணுறாங்க? | Junior Artist Interview - Timepass | டைம்பாஸ்

இவங்க யாரு... என்ன பண்ணுறாங்க?

கோலிவுட்ல சில பேர் சின்னச் சின்னதா கேரக்டர் ரோல் பண்ணியே ரொம்ப ஃபேமஸ் ஆகிருப்பாங்க. ஒவ்வொரு படத்துலேயும் என்னதான் கேரக்டர் ரோல் பண்ணாலும் அவங்க நடிப்பு மட்டும் தனியாத் தெரியும். அந்த மாதிரி நம்ம மனசுல நின்ன சில கேரக்டர் ரோல் நடிகர்களைத் தேடிக் கண்டுபிடிச்சு, பேசினோம். என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க...

செல்வராஜு :  ``எனக்கு சொந்த ஊரு தேனி பக்கத்துல ஒரு கிராமம். முதல்ல விவசாயம் பார்த்துகிட்டு இருந்தேன். இப்போ தேனி டவுனுக்கு வந்துட்டோம். சென்னைக்கு ஷூட்டிங் இருக்கிற டைம்ல மட்டும் வந்துட்டுப் போவேன். சென்னைனு மட்டும் இல்லை. எந்த லொகேஷனா இருந்தாலும் போய்டுவேன். எம்ஜியார் இருந்த டைம்ல நான் அரசியல்ல இருந்தேன். பிரெசிடென்ட், நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் போஸ்ட்டில் இருந்திருக்கேன். பாரதிராஜா எனக்குப் பங்காளிதான். அது மூலமா சினிமாவுக்கு வந்து அப்படியே முழுக்க முழுக்க நடிகனாவே ஆகிட்டேன். பாரதிராஜாவுக்கும், அமீருக்கும் நல்ல பழக்கம். அமீரோட `பருத்திவீரன்' படத்துல லொகேஷன் மேனேஜரா 2005-ல வேலை பார்க்கப் போனேன். என்னைப் பார்த்துட்டு `பொணம் தின்னி' கேரக்டர்ல நடிக்கச் சொன்னாங்க. நானும் நடிக்க ஒத்துக்கிட்டேன். எந்த மாதிரிப் பேர்ல நடிக்கக் கூடாதோ அதே பேர்லதான் அமீர் என்னை நடிக்கச் சொன்னாரு, கடைசியா அந்தப் பேரே நல்லா க்ளிக் ஆகிடுச்சு. இப்போகூட சில பேர் கிண்டல் பண்ண `பொணம் தின்னி'னுதான் கூப்பிடுவாங்க.

கமல், ரஜினி கூடலாம் நடிச்சிருக்கேன். கமல் ஒரு தடவை `நாந்தான் நடிகன்னு நினைச்சேன். அதை கிராமத்துல இருந்து வந்த எவனோ ஒருத்தன் மிஞ்சிட்டான்'னு என்னைப் பார்த்து சொன்னார். நிறைய பேர் என் நடிப்பைப் பற்றிப் பேசுறப்போ குரலையும் ரொம்பப் பாராட்டுவாங்க. `உங்க குரல் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்'னு சொல்வாங்க. சிலர் அதை கிண்டல்கூட பண்ணுவாங்க. எனக்கு இப்போ சினிமாவில் ஆசைனு எதுவும் இல்லை. இந்த ஒரு சாண் வயிற்றுக்கு சாப்பாடும், போட்டுக்க சட்டையும் இருந்தா போதும். மற்றபடி `இந்த ரோல்லதான் நடிக்கணும், பெரிய ஆள் ஆகணும்'னெல்லாம் எதுவும் இல்லை. சாதாரணமா லொகேஷன் பார்க்கவந்து அப்படியே நடிகனாகிட்டேன், இப்போகூட `பருத்தி வீரன்' பார்ட் 2 படத்துக்குத்தான் லொகேஷன் பார்க்க வந்திருக்கேன்.''

`காதல்' சரவணன் :  ``சொந்த ஊர் தேனி பக்கத்துல லெட்சுமிபுரம். சினிமாவுக்கு வர்றத்துக்கு முன்னாடி பிசினஸ் பாத்துகிட்டு இருந்தேன். எந்த பிசினஸ் பண்ணாலும் ஓப்பனிங் நல்லாதான் இருக்கும். பட் ஃபினிஷிங்தான் சரியா இருக்காது. நான் 13 பிசினஸ் பண்ணிருப்பேன். எல்லாமே லாஸ் ஆகிடுச்சு. ஒருதடவை ஜாதகம் பார்த்தப்போ, `சினிமாவுக்குப் போனா நல்லா வரலாம்'னு சொன்னாங்க. நான் அப்போவெல்லாம் கம்மியா, செலக்டிவா ரஜினி, கமல் படம் வந்தா மட்டும்தான் சினிமா பார்ப்பேன். நான்லாம் நடிகனாகிறதா அப்படினு ஒரு சந்தேகத்தோடதான் 2000-த்துல சென்னை வந்தேன். முதல் பட வாய்ப்பு பாலாஜி சக்திவேல் சார்தான் கொடுத்தார். அவர் ஆபீஸுக்குப் போனப்போ `உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே, நீங்க அசிஸ்டென்ட் டைரக்டரா..?'னு கேட்டார். `இல்லை சார். சினிமாவில் நடிக்கதான் வாய்ப்புத் தேடிக்கிட்டு இருக்கேன்'னு சொன்னேன்.  `நல்லா காமெடி பண்ணுவேன்'னு சொன்னேன். உடனே `அப்படின்னா என்னை சிரிக்க வையுங்க நடிக்க வாய்ப்பு தரேன்'னு சொன்னார். உடனே நான் நல்லா தயார் பண்ணிட்டுப் போய் பேசினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick