தியேட்டர் தேவதைகள்!

சிலபேரைப் பார்க்கும்போது அதே முகச் சாயலில் உள்ள வேறொருவரின் ஞாபகம் வரும். அப்படி ஒரே மாதிரியான தோற்றமும் சினிமா கேரியரும் கொண்ட வித்தியாசமான நடிகைகள் இவர்கள். திரைப்பட விழா, நவீன நாடகம், மாற்று சினிமா எனக் கலக்கி எடுக்கும் மாநிற தேவதைகள் இவர்கள்... 

ஒரு பெண்ணின் பால்ய வயதுப் பாலியல் அனுபவத்தைச் சொன்ன ‘மெமரீஸ் ஆஃப் மெஷின்' ஆவணப்படம் சர்ச்சைகளிலும் சிக்கி சக்கை போடு போட்டது.  படத்தில் ஒரே ஷாட்டில் நடித்து அசத்தி, கவனம் ஈர்த்தவர்  கனி குஸ்ருதி! சில தமிழ்ப்படங்களிலும் தலைகாட்டியவர் இவர்!

``அப்பா  மைத்ரேயன், அம்மா ஜெய. ரெண்டு பேருமே சமூக ஆர்வலர்கள். அதனால எங்க வீட்ல ஓரளவுக்குப் புரட்சிகரமான சிந்தனைகள்லாம் இருக்கும். பெண்கள் நாடகங்கள் எல்லாம் நடிக்க ஆரம்பிக்காத காலம் அது. வீட்டுக்குப் பக்கத்துல நடந்த ஒரு நாடகத்துக்கு, திடீர்னு ஆள் தேவைப்படவே எங்கிட்ட கேட்டாங்க. `நடிக்க விருப்பம் இருந்தா நடிச்சுக்கோ'னு அம்மா, அப்பா பச்சைக்கொடி காட்ட, பதினைஞ்சு வயசுல முதல் மேடை ஏறினேன். ஸ்கூல்ல படிச்சு முடிஞ்சதும், திரிசூர்ல ஒரு நாடகப்பள்ளியில முறைப்படி நடிப்பு கத்துக்கிட்டேன். அப்புறம் ஃபிரான்ஸ்ல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிப்பைக் கத்துக்கிட்டேன். 2009-ல மலையாளத்துல ‘கேரளா கஃபே' படத்துல அறிமுகமானேன். மறுபடியும், ஃபிரான்ஸ்ல ஒரு ட்ராமா குழுவில் ரெண்டு வருடம் சேர்ந்திருந்தேன். இப்போ, மாடலிங் - ஆக்டிங்னு ரெண்டிலேயும் பிஸி!'' செம ஜாலி மோடில் பேசுகிறார், கனி குஸ்ருதி.

``தமிழுக்கு எப்படி அறிமுகம்?''

``மிஷ்கின் சார் ரொம்ப நல்ல நண்பர். அந்த நட்பின் அடிப்படையிலதான் `பிசாசு' படத்துல குடிகாரனுக்கு மனைவியா நடிச்சேன். `பர்மா' படத்துல ஒரு கேரக்டர் பண்ணேன். பெரிய கேரக்டர்கள்ல நடிக்கலைனாலும், இந்த ரெண்டு படங்களுமே நல்ல அனுபவம். `மெமரீஸ் ஆஃப் மிஷின்ஸ்' பார்த்துட்டு பிரதாப் போத்தன், லீனா மணிமேகலை, `கள்ளப்படம்' லட்சுமி பிரியா, இயக்குநர் ராஜீவ் மேனன்னு பலரும் பாராட்டுனாங்க.''

``உங்க முகநூல் கணக்கை முடக்கிட்டாங்களாமே?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick