ஆஃப் த ரெக்கார்டு! | Cinema Gossip - Timepass | டைம்பாஸ்

ஆஃப் த ரெக்கார்டு!

சை ஹீரோவின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் எகிறிவருகிறது. இதனால், இனிவரும் படங்களுக்கு அவரே இசையமைக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொல்லி மனைவி உத்தரவாம்!

காதல் இயக்குநருக்கு சென்னையில் `தீம்' பிளானுடன் வீடு கட்டிக்கொண்டிருக்கிறாராம் நம்பர் நடிகை. வீட்டின் பூச்சு முதல், பயன்படுத்தும் பொருட்கள் வரை... எல்லாமே வெள்ளை நிறத்தில் இருக்கும்படி தேர்வு செய்திருக்கிறாராம் நடிகை.

மறைந்த முதல்வரின் `பயோ-பிக்'கில் நடிக்க வேண்டும் என்பதை ஆசையாகச் சொல்லிவந்த மூன்றெழுத்து நடிகை, மறுநாளே அஞ்சலி செலுத்த வந்ததால், அவர்மீது எதிர்வினை ஆற்றிவருகிறார்களாம் ர.ரக்கள். இதனால், வருத்தத்தில் இருக்கிறார் அம்மணி!

சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நாட்டாமையின் கை ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருப்பதால், இப்போது ஓங்கியிருக்கிறது. இனி, பழிவாங்கும் படலத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நாட்டாமை ரசிகர்கள்.

பெரியவீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை லட்சங்களில் இருந்து கோடிக்குக் கொண்டுவந்துவிட்டாராம் இரட்டைப் பெயர் நடிகர். `மொக்க ஹீரோக்களுக்கே அவ்ளோ சம்பளம் கொடுக்குறீங்க. எனக்குக் கொடுத்தா என்ன?' என அவர் டிமாண்ட் வைக்க, அப்செட்டில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

வெளிநாட்டில் பிரச்னையில் ஸ்டண்ட் மாஸ்டர் சிக்கியதாகவும், பிரியாணி நடிகர் அவரைக் காப்பாற்றி இந்தியா கூட்டிவந்ததாகவும், நடிகரின் ரசிகர்கள் சம்பந்தமே இல்லாத வதந்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால், நடிகர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் மாஸ்டர்.

அசால்ட் நடிகர் சம்பள விஷயத்தில் டிமாண்ட் வைத்தே தன் கேரியரை பாதாளத்துக் கொண்டு சென்றுகொண்டிருப்பதாகப் புலம்புகிறார்கள் அவரது நண்பர்கள். தவிர, நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடிக்க, `இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சம்பளம் வேண்டும்!' என்று அடம்பிடிப்பதால், அவர்மீது சங்கத்தில் புகார் கொடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick