கதை விடுறாங்க!

2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்ததும் அறையை விட்டு வெளியே கிளம்பிய கோபால்... - இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...

சக்தி சிவா : ‘அடேய் கோவாலு... எங்கடா இருக்க என்னையும் கூட்டிட்டுப் போடா’ என்று வடிவேலு வாய்ஸ் கேட்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடினான்.

சிவானந்தன் : வருடம் பிறந்ததும் நேராக இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டிடம் சென்று, ‘டிசம்பர் மாதத்திற்கு மட்டும் ஏதாவது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியுமா?’ எனக் கேட்டான். ஏஜென்ட் ஷாக் ஆனார்.

வெங்கட்ராமன் ரமேஷ் : ‘வராதடா’ என்ற புதிய புயல் ஒன்று உருவாகியதாக செய்தி வெளியானதால் பிரெட், பிஸ்கெட் வாங்கிவிட்டு வீட்டிற்கு ஓடினான்.

சாவேஷ் : அப்போது சட்டைப்பையில் இருந்த போன் அலறியது. எடுத்துப் பேச முயலும்போது, எதிரே விரைந்து வந்த லாரி கோபாலை சர்ரென்று கடந்தது. ‘இந்த லாரி நம்மீது மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும்!’ என அதிர்ந்த கோபால், போனை கட் செய்துவிட்டு கவனமாக ரோட்டைக் கடந்தான்.

மொஹம்மத் சஃபி : ஏ.டி.எம். வாசலில் போய் நின்றான். அதன்பின் பெரிய வரிசை காரணமாக 2017 டிசம்பர் 31 அன்றுதான் அறைக்குத் திரும்பினான்.

பாலா : ‘இனி தம் அடிப்பதில்லை’ என முந்தைய நாள் எடுத்த சபதத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே தம் ஒன்றை வாங்கிப் பற்றவைத்தான். நம்ம பசங்க உடனே திருந்திட்டாலும்...!

வினோத் :
பல மாதங்களுக்குப் பிறகு அணிந்த அந்தச் சட்டை பாக்கெட்டில் 1,000 ரூபாய் நோட்டு இருந்ததைப் பார்த்தான். ‘ஐயோ நேத்தோட டைம் முடிஞ்சு போச்சே. இனிமே இதை வெச்சு நான் என்ன பண்ணுவேன்’ எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick