நீங்கள்லாம் யாருடா?

நாம சும்மா இருந்தாலும் வாலன்ட்டியரா வண்டியில ஏறிவந்து, ஹெல்ப் பண்ணுறோம்னு சொல்லிச் சில பேர் பண்ற அட்ராசிட்டீஸ் இருக்கே... ஹைய்யோ ஹைய்யோ ஹையய்யோ!

போன் கீழே விழுந்து `டச் ஸ்க்ரீன் வொர்க் ஆகலையே'னு கடுப்புல உட்கார்ந்திருப்போம். இதெல்லாம் ஒரு மேட்டரா, நாங்கள்லாம்... அப்டீனு பில்டப்போட அதை வாங்கிப் பிரிச்சு மேஞ்சு நம்ம கையில கொடுப்பாங்க. ஹ்ம்ம்ம்ம்ம்... முன்னாடியாச்சும் டச் மட்டும்தான் வொர்க் ஆகாம இருந்துச்சு.. அதைக்கூட மன்னிச்சிடலாம். ஆனா, `இது ஜப்பான் மேடு போன் போல, அதான் செட் ஆகலை. யூ எஸ் மாடலா இருந்துச்சுனா இந்நேரத்துக்கு...' என வெட்டி பில்டப் கொடுப்பாங்க. அதை நினைச்சாதான் ஆத்திரமா வருது மக்களே!

டிரெஸ் எடுக்க எவனையுமே கூட்டிக்கிட்டுப் போகக்கூடாதுன்னு என்னதான் ப்ரீ ப்ளான் பண்ணி வெச்சிருந்தாலும், எவனாச்சும் ஒரு ஃப்ரெண்டுடன் போற சிச்சுவேசன் வந்திரும். அப்புறமென்ன? சாணி கலர்ல ரெண்டு பேண்ட், வெந்தயக் கலர்ல ரெண்டு சட்டைனு சம்பந்தமே இல்லாத கலர்ல செலெக்ட் பண்ணிக்கொடுத்து, `இதுதான் உனக்கு செம'னு நம்ப வெச்சு... சரி அதை விடுங்க.

பஸ் ரூட் தெரியாமல் பராக் பார்த்துட்டு இருக்கும்போது, `இந்த பஸ் அங்கேதான் தம்பி போகுது'னு புடிச்சு உள்ளே தள்ளிவிட்டு டாட்டா காட்டி அனுப்பிவிட ஒரு குரூப் சுத்திக்கிட்டு இருக்கும். `இதைவிட்டால் நாலுமணி நேரம் கழிச்சுத்தான் அடுத்த பஸ்ஸுனு சொல்லியும் அலறவிடுவாங்க. ஆனா, உள்ளே போய் கண்டக்டர்கிட்ட டிக்கெட் கேட்கும்போதுதான் தெரியும்... நாம போற ஏரியாவுக்கு அப்படியே ஆப்போசிட் ரூட்டுல பஸ்ஸு போகுதுனு!. அதுபோக `பதினைஞ்சு நிமிடத்துக்கு ஒருதடவை அந்த ஏரியாவுக்கு பஸ் இருக்கே'னு வேற சொல்லி ஷாக் கொடுப்பார் கண்டக்டர். முருகேசா, நான்  கேட்டேனா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick