எக்ஸாம் ஹால் ஆறுச்சாமிகள்!

ன்னைக்குக் காலைல 10 மணிக்கு எக்ஸாம். 9 மணிக்கே எல்லோரும் வந்திருப்பாங்க. எக்ஸாம் ஹால் வாசல்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மார்க்கமா நின்னுட்டு இருப்பாங்க. அப்படி நின்னுட்டு இருக்கும் பாய்ஸ் எத்தனை வகைப்படுவார்கள்?

படிப்பாளி பாய்: இடியே விழுந்தாலும் காதைக் குடைஞ்சுட்டு புத்தகத்தைப் படிக்கிற ஆளு இவன். ஒரு ஓரமா நின்னு, `ஓ காட்! பியூட்டிஃபுல்! ஓ காட் பியூட்டிஃபுல்!'னு முட்டி முட்டி படுச்சிட்டு இருப்பான். புக்ல என்ன இருக்குனே தெரியாம எப்படியாவது ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்னு தம்பி ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணுவாரு. கண்டிப்பா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிருவீங்க ராசா!

படிக்காத பாய்:
`நாங்க எல்லாம் அப்பவே அப்புடி, எங்களுக்கு அரியர் எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி'னு ஒரு கேங் பாய்ஸ் உட்கார்ந்திருப்பாங்க. சீப்பை வெச்சு தலைவாரிக்கிட்டும், ஜன்னல் கண்ணாடியில முகம் பார்த்துக்கிட்டும் பபிள்கம் மெல்லுவானுங்க இந்த ராஸ்கல்ஸ். எக்ஸாம் பயம் கொஞ்சம் கூட இல்லாமல் தைரியமா உட்கார்ந்திருப்பாங்க. உண்மையாவே நீங்க கெத்துதான் பா(ய்)ஸ்!

அரைகுறை பாய்: இவங்க எப்படினா, மேல இருக்குற ரெண்டு டைப் பாய்ஸ்க்கும் நடுவுல! `அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சாகும்!' என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்றவங்க. `இவ்வளவு படிச்சா போதும், பாஸ் ஆகிடலாம்'னு `ரெண்டே ரெண்டு' யூனிட்டை மட்டும் படிச்சிட்டு தெம்பா... ஒரு நம்பிக்கையோட எக்ஸாம் எழுதப் போவாங்க. நம்பிக்கை... அதுதானே எல்லாம்!

அதிசயப்பிறவி பாய்: இவர் எப்படினா அன்னிக்குக் காலைல என்ன எக்ஸாம்னே தெரியாது. நேரா காலேஜுக்கு வந்து தன்னோட ஃபிரெண்டைக்  கேட்டுத்தான் தெரிஞ்சிக்குவார். டக்குனு தன்னோட படிப்பாளி ஃபிரெண்டைக் கூப்பிட்டு, அவங்கிட்ட இருக்குற புக்கை அடிச்சிப் பிடுங்கி, முக்கியமான கேள்வி எல்லாம் அவங்கிட்டையே கேட்டு அப்படி இப்படினு படிச்சிட்டுப் போய் எக்ஸாம் எழுதிருவார். ரிசல்ட் வரும்போது பார்த்தா இவன் பாஸ் ஆயிருவான். இவனுக்கு சொல்லிக்கொடுத்த ஃபிரெண்ட் பெயில் ஆயிருவான். விடுங்க பாஸ், காலேஜ் லைஃப்ல இதுலாம் சர்வ சாதாரணம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick