உஷார் மக்கா உஷார்!

வளும் நானும் செல்லும் சிம்மும் அப்படின்னு சொல்லுற ரேஞ்சுக்கு எந்நேரமும் செல்போனும் கையுமாவே இருக்கீங்களா..? அப்படின்னா உங்களை நோக்கித்தான் அது வந்துகிட்டு இருக்கு ப்ரோ. எதுன்னு கேட்குறீங்களா? அதான் ப்ரோ... மொபைல் போன் டிஸ்ஆர்டர்ஸ். எப்போதும் மொபைல்போனோடவே இருந்தா வித்தியாச வித்தியாசமா நிறைய நோய் வருமாம் ஃப்ரெண்ட்ஸ். என்ன மாதிரி நோய்ன்னுதான் பாருங்களேன்...

`என்னால போன் இல்லாம ஒருநாள்கூட உயிரோட இருக்க முடியாது'னு நினைக்கிறீங்களா? கங்கிராட்ஸ். உங்களுக்கு `நோமோ ஃபோபியா'. சைனீஸ் ஃபுட் மாதிரி இருக்குனு கேட்கிறீங்களா? மொபைல் போன் இல்லாம எப்படி உயிர் வாழ்வேனோ?'னு நினைச்சுக்கிட்டு இருக்கிற எல்லோருக்கும் இந்த நோய் இருக்கும் பாஸு.

சில பேரோட போனுக்கு யாருமே கால் பண்ணலைனாலும் எப்பவும் அவங்களுக்கும் ரிங் அடிக்கிற மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கும். இந்த மாதிரி `இஸ்க் இஸ்க்னு` கேட்கிற நோய்க்குப் பேருதான் `ரிங்சைட்டி'. நம்ம நாட்டுல கிட்டத்தட்ட எல்லோருக்குமே இந்த மாதிரி ரிங்டோன் கேட்கிற `ரிங்சைட்டி' கண்டிப்பா இருக்கும்.

நான்தான் மொபைல்ல வைப்ரேட்லயே வெச்சிருக்கேனே... எனக்கு `ரிங்சைட்டி' எல்லாம் வராதுனு நினைக்கிறவங்களுக்கு `கேட்' போட வந்ததுதான் `பேன்டோம் வைப்ரேஷன் சிண்ட்ரோம்'. இந்த நோய் வந்தா எப்பவும் பாக்கெட்டில் இருக்கிற மொபைல் வைப்ரேட் ஆகிற மாதிரியே ஃபீல் வரும் ப்ரோ. பாக்கெட்டுல எப்பவும் `கிர்ர்ர் கிர்ர்ர்’னு உறுத்திக்கிட்டே இருக்கும்.

எந்நேரமும் யார்கிட்டயாவது சாட் பண்ணிக்கிட்டே இருந்தா, உங்களுக்குக் கண்டிப்பா `ஸ்லீப் டெக்ஸ்டிங்' வர்றதுக்கு சான்ஸ் இருக்கு ஃப்ரெண்ட்ஸ். இந்த நோய் வந்தா நீங்க தூங்குனதுக்கப்புறமும் யாருக்காவது சாட் பண்ணுற மாதிரியே ஒரு ஃபீலிங் இருக்கும். நீங்க ஒன்சைடா லவ் பண்ணுற பொண்ணு உங்களுக்கு, `மாமா ஐ லவ் யூ!'னு டெக்ஸ்ட் பண்ணுற மாதிரியெல்லாம்கூட கனவு வரும். நிஜத்துலதான் நடக்கலை. கனவுலயாவது நடக்கட்டும்...டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick