நீயும் தமிழனே!

லகத்துல எந்த மூலைக்குப் போனாலும் நம்ம ஊர்க்காரங்களை மட்டும் ரொம்ப ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சிடலாம். அப்படிக் கண்டுபிடிக்க சில குறிப்புகள் இருக்கு. என்னன்னு பார்க்கலாமா?

பாடாவதி டவுன்பஸ்ல ஏறினாலும், ஃபாரீன் போறதுக்கு ஃப்ளைட்ல ஏறினாலும் அல்பத்தனமா ஜன்னலோர சீட்டுக்கு ஆசைப்பட்டு பக்கத்து சீட்டுக்காரன்கூட வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்கிறவன் வேற யாருனு நினைச்சீங்க. எல்லாம் நம்ம பயகதேன்.

பத்து லட்ச ரூபாய் செலவு பண்ணிப் புதுசா கார் வாங்கினாலும் ரெண்டு ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கி கார் மவுத்ல கட்டிவிட்டாதான் திருப்தியா இருக்கும். இந்த மூடநம்பிக்கையை மெய்ப்பிக்கிறதுக்காகவே எலுமிச்சம்பழத்தோட சிட்ரிக் அமிலம், கார் புகைகூட வேதிவினை புரிஞ்சு டிரைவருக்குத் தூக்கம் வராமத் தடுக்குதுனு ஆராய்ச்சிபூர்வமான தகவல் வேற கொடுப்பாங்க. அலேக்கா பிடிங்க அவன் நம்மாளுதான்!

ஹோட்டலுக்குப் போனா மெனு கார்டைப் பார்க்காமலேயே பக்கத்து டேபிளில் இருக்கிறவர் என்ன சாப்பிடுறார்னு பார்த்து அதில் ரெண்டை ஆர்டர் செய்வதுதான் தமிழனின் தனிப் பண்பாடு எனச் சொன்னால் மிகையாகாது.

ராத்திரியில் ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிடும் தமிழர்களுக்கே உரிய ஒரு பழக்கம், எந்தச் சாப்பாடும் முடிஞ்சதுக்கு அப்புறம் பசி எடுக்கலைன்னாலும் ஒரு ஆஃப்பாயிலைப் போட்டு அடைக்கிறது. இந்தப் பழக்கம் மட்டும் முட்டை கிடைக்கிற எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழர்கள்கூடவே தொத்திக்கிட்டு வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick