கூட்டம் கூட்டமா ஆடாதீக!

சினிமாவுல அயிட்டம் சாங் ஆடுறதுனா எவ்வளவு கஷ்டம் தெரியுமா பாஸ்..? சில்க் ஸ்மிதா முதல் சிந்து துலானி வரைக்கும் அவங்க சார்பாகத்தான் இந்தக் கேள்விகளே...

ரஜினிகாந்த் சொல்ற வசனம் மாதிரிதான், ஒரு படத்துல அயிட்டம் சாங் எப்போ வரும் எப்டி வரும்னு யாருக்குமே தெரியாது. ஆனா  பாட்டு வர்ற  அந்த அஞ்சு நிமிசத்து கேப்ல மொத்தவித்தையையும் இறக்கி பெர்ஃபார்மன்ஸைக்  காட்டிப் பேரு வாங்குறதெல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்.

ஆடி மாசம்தான் எல்லாப் பெண்களும் மஞ்சள் சேலை கட்டி ஊருக்குள்ளே நடமாடுவாங்க, ஆனா அயிட்டம் சாங்னு வந்துட்டா மார்கழி, தையிலகூட `கத்தாழ கண்ணால'னு கதறக் கதற மஞ்சள் கலர் சேலையில டான்ஸ் ஆடியே ஆகணும்.

போனா போகுதுனு பழக்கத்துக்காக சில ஹீரோயின் கள் ஒத்தைப் பாட்டுக்கு   ஓரஞ்சாரமா ஆடிட்டுப்போனா அவ்வளவுதான், `மார்க்கெட் சரிஞ்சிடுச்சு, மல்லிகைப்பூ விரிஞ்சிடுச்சு'னு இஷ்டத்துக்கும் அவங்க மேல அண்டா கணக்குல அள்ளிப்போட்டு விட்டுட்டு அமைதியாக வேலை பார்ப்பாங்க. தலைவா விஜய் சொல்ற மாதிரி இதுலாம் ஒருவழிப்பாதை. நோ வே!

ஆடச்சொல்றதுதான் ஆடச்சொல்றீங்க, எப்போவாச்சும் கொஞ்சம் ஃப்ரீ யான இடமா விட்டு ஆடச் சொல்லுறீங்களா? ஆதார் கார்டுக்கு அப்ளை பண்ண வந்த கூட்டம் மாதிரி இருக்குற அந்தக்  கும்பலான இடத்துலயே ஆடச்சொல்லுறீங்களே... காத்தே வராத அந்தக் கூட்டத்துல டான்ஸ் எப்படிய்யா வரும் ராசாக்களே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick