அனானியே அப்பாலே போ! | Facebook Fake id - Timepass | டைம்பாஸ்

அனானியே அப்பாலே போ!

ன்னிக்கு எல்லோருமே ஃபேஸ்புக் உபயோகிக்கிறாங்க. அதுவும் இளைஞர்களுக்கு மிகவும் பிடிச்ச புத்தகமா இருக்கு இந்த முகநூல் புத்தகம்! அப்படிப்பட்ட இந்த முகநூல் புத்தகத்துல இந்த இளைஞர்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது இந்த ஃபேக் ஐடிக்கள்! பசங்க கஷ்டப்பட்டு ஒரு பொண்ணைத் தேடிப் பிடிச்சு ஃபிரெண்ட் ஆகி, `ஹாய், ஹலோ'ல ஆரம்பிச்சு, கடைசியா, `ஐ லவ் யூ' சொல்லும்போதுதான் தெரியும்... அது நம்ம கூடவே இருக்குற ஏதோ ஒரு பயபுள்ளையோட ஃபேக் ஐடினு! என்னதான் `அப்பாலே போ ஃபேக் ஐடியே!'னு அதை விரட்டினாலும், `விடாது கருப்பு' மாதிரி நம்மளை விடவே விடாது. அப்படி நம்மை அச்சுறுத்தும் ஃபேக் ஐடியைக் கண்டுபிடிப்பது எப்படி? ஒரு சில டிப்ஸ்...

உங்களுக்கு ஏதோ தெரியாத பொண்ணு பேருல இருந்து ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் வந்தாலே நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருந்துக்கணும். அந்த ரெக்வஸ்ட் அனுப்புன ஐடியை `ஜேம்ஸ் பாண்ட் 007' மாதிரி அலசி ஆராய்ந்துதான் அக்செப்ட் பண்ணணும்.

அடுத்து நீங்க பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம், Mutual Friends. ஆமாங்க... இதைப் பார்த்தே வந்திருக்கிறது களவாணிப்பயலானு கண்டுபிடிச்சிடலாம்.  அந்த  ஐடிக்கு Mutual Friends எல்லாம் உங்களுக்குத் தெரிந்த பயபுள்ளைகளா இருந்தா டவுட்டே வேணாம்.. அது கன்ஃபார்ம் ஃபேக் ஐடி பக்கியே தான்.  எவனோ நம்ம பையன்தான் அந்த வேலையைப் பார்த்திருக்கான். பார்த்து சூதானமா இருந்துக்கோங்க.

இந்த பிரியா, ஸ்ரீ - இந்த இரண்டு பேருல முடியுற மாதிரி ஐடிகள்ல இருந்து உங்களுக்கு ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் வந்தாலே அது ஃபேக் ஐடியா தான் இருக்கும். நூற்றுக்கு ஒண்ணு ரெண்டு ஐடி இதுல விதிவிலக்கு. அது என்னமோ தெரியல, இந்த ஃபேக் ஐடி வச்சிருக்கவங்களுக்கு இந்த பிரியா பேர் மேலேயும்,  பேர் மேலேயும் என்ன ஆசையோ!

ஃபேக் ஐடி பிரண்ட் லிஸ்ட் திறந்து பார்த்தீங்கனா, `இதுக்கு ஒரு எண்டே இல்லையா! நிக்காம போயிட்டே இருக்கு?' அப்படிங்கிற அளவுக்கு ஃபிரண்ட்ஸ் இருப்பாங்க. திட்டம் போட்டு தீயா வேலை செய்றான் தெரிஞ்ச பயபுள்ள! அப்புறம் புரொஃபைல் பிக்சரா திவ்யா, நயன் தாரா, த்ரிஷானு வெச்சிருப்பாங்க. இல்லைன்னா ஜட்டி போட்ட பாப்பா படம்! 

அப்புறம், அவங்களைப் பற்றிய தகவல்கள் எல்லாம், தெளிவா கொடுத் திருப்பாங்க. அதுல பார்த்தீங்கன்னா, அவங்க பத்தாம் வகுப்பு படிச்ச ஸ்கூல் பேரு, ப்ளஸ்டூ  படிச்ச ஸ்கூல் பேரு, காலேஜ் பேரு எல்லாம் ஒரே பேரா இருக்கும்.

தட் கொண்டைய மறக்கலையே மொமன்ட்!

ஆகவே மக்களே சூதானமா இருந்துக் கோங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick