பால்வாடிப் பழக்கங்கள்! | Childhood Behavior - Timepass | டைம்பாஸ்

பால்வாடிப் பழக்கங்கள்!

ம்மாளுங்ககிட்ட இன்னும் மாறவே மாறாத பால்வாடிப் பழக்கவழக்கங்கள் நிறைய இருக்கு பாஸ். வாங்க சொல்றேன்... 

`டீடோட்டலர்'னு சொல்லிச் சொல்லியே  சீன் காட்டி மலை மலையாக மிக்சர், காராச்சேவை தின்பார்கள். இன்னும் தேன் மிட்டாய், எலந்தவடை, கடலை பர்பியை வாங்க என்ஃபீல்டை நிறுத்தி ஓரஞ்சாரமாய் பெட்டிக்கடைக்குள் ஒதுங்குவார்கள்.  மாலை மேகங்கள் கூடிவிட்டால் போச்! வாழைக்காய் பஜ்ஜியும் ஏலக்காய் டீயும் கொதிக்கக் கொதிக்க எப்படியாவது வாய்க்குள் போயே ஆகணும்.

 கங்கு மாதிரியான சிவந்த பஜ்ஜிகளை, சோத்தாங்கை பீச்சாங்கை என பஜ்ஜிகளில் வைத்து காய்ச்சல் அடிக்கிறதா என `செல்சியஸ் டெஸ்ட்' செஞ்ச  பிறகே சாப்பிடுவார்கள். நீங்க ரெண்டு கையால தொட்டதை மத்தவங்க சாப்பிடணும்!?

 புது எவர்சில்வர் அண்டா, கிணத்துத் தண்ணி, பஸ் ஜன்னல், முன் சீட்டு வழுக்கைத் தாத்தா என எது கிடைத்தாலும் க்ரூமிங் பண்ணிக்கொள்வது ஒரு பழக்கம்.  ரோட்டில் ஸ்டாண்டு போட்டு டூவீலர் நின்னால் போச்சு. உடனே உடம்பை பெண்டாக்கி கலைந்திருந்த முடியை சீராக்கியோ, சீராயிருப்பதை `ஸ்பைக்' கூராக்கியோ செல்வார்கள்.

ஆழ்ந்த உறக்கத்தில் பஸ்ஸில் வந்துகொண்டிருந்தாலும் பஸ் ஸ்டாண்டு நெருங்கியதும் பதறி எழுறோமே எப்பிடி? குப்பென்ற கப்புதான். கட்டணமோ சும்மாவோ எப்படி கழிப்பறை கட்டி வைச்சாலும் காத்தாட சுற்றுச்சுவரில் மாடர்ன் ஆர்ட் போட்டேயாகணும் நம்மாளுகளுக்கு!

மதியம் லன்ச்சுக்குப் பின், மாலை வீடு திரும்பும் முன் பவுடர் வைத்து லைட்டா டச் அப், ஃப்ரெஷ் அப் செய்யாவிட்டால் பலருக்கு அலர்ஜியாகிவிடும்.  தெரிந்த சலூன் கடை, உறவினர் வீடு, நண்பேண்டா ரூம்ஸ் எங்கு போயினும் கடைசியாகக் கிளம்பும்போது பவுடர் டப்பியைப் பிடித்து கர்ச்சீப்பை ரீஃபில் செய்துகொள்ளும். 

அலாரம் அடித்து தூக்கத்தைக் கெடுத்தா எங்கே தூக்கி அடிச்சு உடைச்சிடுவாங்களோனு  செல்போன் கம்பெனிக்காரன் `ஸ்னூஸ்' என்ற ஆப்ஷனைக் கண்டுபிடித்தான். பத்து ஸ்னூஸ் அடித்தாலும் கண்ணைத் திறக்க மாட்டோமே!

பல் விலக்குவது நல்ல பழக்கம். வாய் கொப்பளிப்பதும் நாக்கு வழிப்பதும் நல்ல பழக்கமே. ஆனால், அப்பார்ட்மென்ட்டே கிடுகிடுக்க, `பயணங்கள் முடிவதில்லை' மோகன்போல கொடூரமாய் இறுமுவார்கள். ஆத்தீ பயந்து வருது.

பீச்சில் மக்காச்சோளம் மாங்காய்க்கீற்று விற்கும் அப்பாவிகளிடம் வித்தியாசமாய் பேரம் பேசுவார்கள். சாம்பிள் பார்க்க, டேஸ்ட் பார்க்க என  ஒரு கை அள்ளி அதக்கிக்கொள்வார்கள்.  கடைசியாக ஐந்து ரூபாயை எடுத்து நீட்டி, `என்னது காரப் பொரி 20 ரூபாயா? 5 ரூபாய்க்கு தர்றியா?' எனச் சொல்லியபடி வாங்காமல் நடையைக் கட்டுவார்கள். அடேய்களா!  

ஷேர் ஆட்டோவை லெப்ட்டுல ஓரமா நிப்பாட்டச் சொல்றது (இல்லேனா மட்டும் நடு ரோட்டுல நிப்பாட்டி இறக்கிவிட்ருவாராக்கும்!), கேட்பதற்கு முன்பே `சில்லறை இல்லை' எனும் ரெடிமேட் பதில் உரைப்பது, எத்தனையோ தடவை போட்டிருந்தாலும் எதுக்கு எதுனு தெரியாமல் குத்துமதிப்பாக எல்லா ஸ்விட்சையும் தட்டிக்கொண்டிருப்பது...

என்னய்யா லிஸ்ட்டு ஒரு கன்ட்ரோலே இல்லாமப் போய்க்கிட்டிருக்கு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick