இப்படித்தானே காட்டினாங்க வித்தைய!

ம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் (Computer Graphics - CG)  சினிமா உலகம் இன்னிய தேதியில் தவிர்க்க முடியாத விஷயங்கள்ல ஒண்ணா வளர்ந்திருக்கு. ‘ ‘எந்திரன் 2.0’ படத்தை நீங்க 3D கண்ணாடி போட்டெல்லாம் பார்க்க வேண்டாம் மக்கா... சாதாரணமா பார்த்தாலே 3D எஃபக்ட்ஸ்ல தெரியுற அளவுக்கு நாங்க டெக்னிக்கலா எடுத்துருக்கோம்’னு கெத்து காட்டுது அந்த டீம். இந்த அசுர வளர்ச்சிக்கு எல்லாம் பிள்ளையார்சுழி போட்டு, சிஜி-ஐ தமிழ் சினிமா வரலாற்றில் ஆரம்பிச்சு வெச்ச படங்களை ஒரு `த்ரோபேக்' விசிட் செய்வோம்!

26 வருஷத்துக்கு முன்னாடி கொசுவத்தியை சுத்தவிட்டா, நம்ம மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படம் கண்ணுல தெரியுது. அப்பார்ட்மென்ட் கலாசாரத்தையே ஊருப்பக்கம் முதல்முறையா அதுலதான் பார்த்திருப்பாங்க நெறைய பேரு. அப்படியிருக்க, ‘இதுக்கே வாயடைச்சா எப்படி? இங்க பாரு மேஜிக்கை!’னு ‘ஸ்டார் வார்ஸ்', ஸ்பீல்பெர்க்கின் `ஈ.டி' எஃபெக்ட்டை 'ராத்திரி நேரத்தில்' பாட்டில் காட்டியிருப்பார்கள். அதே படத்தில் சிம்பிளாக தாஜ்மஹாலுக்கு மேல சைக்கிள்ல `ப்ளூமேட்' என்ற ஆர்ய கால டெக்னிக்கைப் பயன்படுத்தி `மேஜிக் ஜேர்னி' போகவிட்ருப்பார் மணி சார்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick