``ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்கும்!''

ழநியைப் பூர்விகமாகக் கொண்ட அசோக்ஜி என்பவர் தியானம் ஸ்பெஷலிஸ்ட். `நள்ளிரவு தியானம் செய்தால் உடல் ஆரோக்யம் பெறலாம்' என நடுச்சாமத்தில் தியானம் செய்தும், பலருக்கு தியானம் கற்பித்தும் கவனத்தை ஈர்த்தவர். அதைவிட ஆரூடம் சொல்வதில் கில்லி. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘அ.தி.மு.க மீண்டும் ஜெயிக்கும்’ என்று அசோக்ஜி சொன்னார். அதன்பின்னர், `பெங்களூரு சிறையில் இருந்து ஜெ விடுதலை பெறுவார்' என்றும்,  கடந்த வருடம், `சென்னையில் வெள்ளம் வரும்' என்று முன்கூட்டியே அசோக்ஜி சொல்லி ஏரியாவையும் தாண்டி பரபரப்பு கிளப்பினார். இப்போது, `ஜெயலலிதாவின் ஆவி, சாந்தி அடையவில்லை. கடைசி காலத்தில் தன்னைக் கேவலப்படுத்தியவர்களைப் பழி வாங்கும்!' என்று பரபரப்பு கிளப்பி இருக்கிறார் அசோக்ஜி.  அப்படி என்னதான் அவர் சொல்கிறார் என்று கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா...?

‘`இந்துமத தர்மப்படி எந்தவொரு ஆத்மாவும் மூன்று நாள் கழித்துதான் கர்மா சேரும் என்பது விதி. முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முழுமையாக அவரது உடலை விட்டு வெளியேறவில்லை.  பொதுவாக இறந்த பிறகு பிரேத சாபம், பிரேத தோஷம் என்று ஒன்று உண்டு. மூன்று நாட்கள்வரை இறந்த உடலை கேவலப்படுத்தினாலோ, அவமானம் செய்தாலோ அதற்கு நிச்சயம் சாபம் இருக்கிறது. அதுமாதிரியான ஜெயலலிதாவின் சாபத்துக்கு நிறைய நபர்கள் நிச்சயமாக ஆளாகி இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஜெ உடலுக்குள் உயிர் இருந்த கடைசி காலகட்டத்தில் அவரிடம் உண்மையில்லாமல் இருந்தவர்களுக்கு, அவரைக் கேவலமாக நடத்தியவர்களுக்கு எல்லாம் கண்டிப்பாக தண்டனை உண்டு. ஏனென்றால் இது நாடு சம்பந்தப்பட்ட உண்மை. நான் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

இந்து ஆகமவிதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள், சாங்கியங்கள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள்,  பொருட்கள் இவைகளை யாராவது எடுத்துக்கொண்டாலும்,  பயன்படுத்தினாலும் அது அபகரிப்பாகும். அப்படிச் செய்பவர்களுக்கு கடுமையான பாடத்தை, தக்க தண்டனையை ஜெயலலிதா நிச்சயம் வழங்குவார்.  இதுபற்றி எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. இது அப்பட்டமான ஆன்மிகம், விஞ்ஞானம். கண்ணுக்குத் தெரியாத காற்றை நாம் எப்படி உணர்கிறோம், மின்சாரத்தை ஒப்புக்கொள்கிறோம். அதுபோலவே இந்த உண்மையையும் நிச்சயம் உணர்வீர்கள். ஜெயலலிதாவின் ஆவி 2023-ம் ஆண்டுவரை பூலோகத்தில் நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுப்பதற்கு இன்னும் ஆறு வருஷத்துக்கு மேலாகும். அதுவரை பூமியிலேயே வசிக்கும். 2023-க்குப் பிறகே சாந்தி அடையும். இந்த உண்மையை எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தாலும் அவர்களுக்கு நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick