சைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்!

‘`இங்கே இருந்து கிளம்பும்போது, எனக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி வேற எங்கேயும், யாரையும் தெரியாது. மூணாவது நாள் ஆந்திரா போய்ச் சேர்ந்தப்போ, இன்னும் கொஞ்சம் தைரியம் அதிகமாச்சு. நான் இயற்கையோட ஆற்றலை நம்புனேன். அது என்னைக் கைவிடலை. இயற்கையைவிடப் பேராற்றல் எதுவும் இருக்கா என்ன?” - மாற்றத்தை எதிர்நோக்கும் அடுத்த தலைமுறையின் பிரதிநிதியாக நம்பிக்கையோடு பேசுகிறார் விஜய் கார்த்திக். முப்பத்து மூன்று நாள், நாலாயிரம் கிலோமீட்டர், நம்முடைய ‘மரபு வாழ்விய’லை வலியுறுத்தி சென்னை டூ காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்ட பெரம்பலூர்க்காரர்!

‘`இந்தப் பயணத்துக்கு எப்படித் தயார்ப்படுத்திக்கிட்டீங்க?’’

``பயணத்தை முடிவு பண்ணதும், யார்கிட்டேயும் சொல்லலை. ஜூன் 1-ம் தேதி காலையில நாலு மணிக்கு, எனக்கான துணிமணி, சின்னதா ஒரு முதலுதவிப் பெட்டி, சைக்கிளுக்கு டூல் பாக்ஸ், படிக்கக் கொஞ்சம் புத்தங்கள்னு எடுத்துட்டுக் கிளம்பிட்டேன். சின்னதா ஒரு கணக்கு வெச்சிருந்தேன். மூணு நாளைக்குள்ள விசாகப்பட்டினம் போயிட்டோம்னா, அதுக்குப்பிறகு இந்தப் பயணத்தைப் பத்தி சொல்லிக்கலாம்னு இருந்தேன். என் கணக்குப்படியே மூணாவது நாள் ஆந்திரா பார்டர்ல இருந்தேன்!'' 

‘`யார் நீங்க? எதுக்காக இந்தப் பயணம்?’’

``எல்லோரையும் போல படிச்சா நல்லா சம்பாதிக்கலாம்னு இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, சென்னைல வேலை பார்த்த மிடில்கிளாஸ் பையன் நான். அப்பா தமிழ் வாத்தியார். ஒரு நாள் வேலைய விட்டுட்டு நின்னப்போதான், வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கான பிரச்னை எங்கே இருந்து ஆரம்பிக்குதுனு தேடணும்னு தோணுச்சு. அதுக்குப் பின்னால இருக்குற மறைமுக அரசியலுக்கான காரணங்கள், இடதுசாரி புத்தகங்கள் மூலமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து நம்மாழ்வார், செந்தமிழன் என இயற்கை ஆர்வலர்களைக் கவனிக்க ஆரம்பிச்சேன். தற்சார்பு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிறதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம்னு புரிய ஆரம்பிச்சது. நம்ம தலைமுறையிலேயே இதுக்கான வேலைகளை ஆரம்பிச்சாதான் அடுத்த தலைமுறைக்காவது போய்ச் சேரும். அதுக்கு நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போதான், இந்த சைக்கிள் பயணம் தோணுச்சு!''

‘`பயணத்துல என்னென்ன சவால்களைச் சந்திச்சீங்க?’’

``கிளம்புன முதல் நாளே சைக்கிள் பஞ்சர்! நானே சரி பண்ணிட்டேன். காட்டுப்பாதையிலதான் பயணம். நைட்டு தங்குறதுக்கு இடம்னு எதுவும் இல்லை. அந்தக் காட்டுப்பாதையில சின்னதா ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருந்துச்சு. அங்கேயே சைக்கிளை நிறுத்திட்டு, சைக்கிளையும் என்னையும் சேர்த்து ஒரு கயிற்றுல கட்டிக்கிட்டேன். பிறகு ஒவ்வொரு நாளும் எங்கேயாச்சும் மரத்தடி, இல்லைன்னா பெட்ரோல் பங்குல தங்கிக்க ஆரம்பிச்சேன். கொல்கத்தா வரைக்கும் இதையேதான் பண்ணினேன். அதுக்குப் பிறகுதான் ஒடிசால கம்யூனிஸ்ட் கட்சி ஆஃபீஸ்ல தங்கிக்கிட்டேன். முதல் ரெண்டுநாள் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு. பிறகு ஒரு புரிதல் உண்டாக ஆரம்பிச்சது!''

‘`வெவ்வேறு மாநிலங்கள், மொழி, இனம், நிலம்... எப்படி இருந்துச்சு இந்த அனுபவங்கள்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick