டெக்மோரா

ழைய 500, 1000 ரூபாய்லாம் செல்லாதுனு ஆரம்பிச்சு, புது 500 ரூபாய் கூட செல்ஃபி போடுற அளவுக்கு நாடு வேகமா போயிட்டு இருக்கு. இதுல சிலபேர், `எங்கிட்ட வாலட் இருக்கு, மொபைல் ஆப் இருக்கு. நான் கேஷ்லெஸ் எக்கானமிய ஆதரிக்கிறேன்!'னு ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க. பாஸ், உங்களுக்காகத்தான் இந்த விஷயம்...

மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், `இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான பெரும்பாலான ஆப்ஸ்கள் பாதுகாப்பானதாக இல்லை'னு கூறி இருக்கு.  `பணப் பரிமாற்றம் செய்வதற்கு பிரத்யேகமாக மொபைல் போன்களில் வன்பொருள் (hardware) அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்டிராய்ட் இயங்குதளத்திலான பணப் பரிமாற்ற மொபைல் ஆப்-களில் இந்த மாதிரி வசதிகள் இல்லை' என்று தெரிவித்துள்ளது.

மேலும் திடீர் ஆப் பயன்பாட்டாளர்களிடம் பணம் பறிக்க போலி ஆப்களும் வெளியாகி இருக்கிறதாம். ஏற்கெனவே இந்தியாவில் உள்ள 32 லட்சம் ஏடிஎம் கார்டுகளோட பின் நம்பர் திருடப்பட்டிருக்குனு அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துச்சு. இதுக்காக பின் நம்பரை மாத்தினவங்க, இப்போ ஆப்ஸ்களையும் `அன் இன்ஸ்டால்' பண்ண வேண்டிய சூழல் இருக்கு!

டெக்னாலஜியைப் பாதுகாப்பா பயன்படுத்தலைனா அது நமக்கு ஆபத்தா முடியும். இது எந்திரன் சிட்டி ஆரம்பிச்சு இன்டெர்நெட் பேங்க்கிங் ஆப்ஸ் வரைக்கும் நிரூபிக்கப்பட்டிருக்கு. `அதுக்காக பணப் பரிவர்த்தனை செய்ய ஆப்ஸே யூஸ் பண்ணக்கூடாதா'னு கேக்குறீங்களா? அதுக்கும் பதில் இருக்கு. உங்க பேங்க் வெப்சைட்ல இருக்குற ஆப்ஸ் லின்க்குல போய் டவுன்லோட் பண்ணுங்க. ப்ளே ஸ்டோர்ல உள்ள ஆப் குறிப்பிட்ட பேங்கோட அதிகாரபூர்வ பேஜ்ல இருக்கானு பாருங்க. தப்பான ஆப்ஸ் மூலமா பணத்தை இழக்காதீங்க!

இந்தியாவில் இன்டெர்நெட் பேங்க்கிங் மூலமா தான் அதிகமான கணக்குகள் முடக்கப் படுதாம். அதுவும் பிரைவேட் ப்ரெளசிங் சென்டர் கள் மூலம் செய்யும்போது ஸ்க்ரீன் கேப்ச்சரிங் முறையில் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இனிமே ப்ரெளசிங் சென்டர் போய் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்றதை அவாய்ட் பண்ணுங்க பாஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick