ஸ்மார்ட் தொட்டி! | Smart Pot - Timepass | டைம்பாஸ்

ஸ்மார்ட் தொட்டி!

சைக்காகவும் அழகுக்காகவும் பலவிதமான செடிகள் வாங்கிருப்போம். ஆனா செடிக்கு எப்போ தண்ணி ஊத்தணும்னு தெரியாது. வெளியூர் போகும்போதோ அல்லது மறதியிலோ தண்ணி ஊத்தாம செடிகளை வாட விட்டுருவோம். நெதர்லாந்து நாட்டில் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிருக்காங்க!

வழக்கமான பூந்தொட்டிகளில் நாம தண்ணீர் ஊற்றும்போது, செடிகளுக்குத் தேவையான அளவு போக மீதமுள்ள நீர் தொட்டிக்குக் கீழ் வெளியேறிவிடும். மறுபடியும் செடிகளுக்கு நீர் தேவைப்படும் நேரத்தில் சரியாக நாம் நீர் நிரப்ப வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது ‘தி நேச்சுரல்ஸ் பேலன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூந்தொட்டி.

செடியில் உள்ள மண்ணிலிருந்து பிரிக்கப்பட்டு நீர் ஊற்றத் தனியாக ஒரு பகுதி இதில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மண் முழுவதும் நனையாமல், செடிக்குத் தேவைப்படும்போது மட்டும் நீர் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரைக்குமான, செடிக்குத் தேவைப்படும் நீர் இந்தப் பகுதியிலிருந்து தொட்டிக்குச் செல்கிறது.

இது மட்டுமல்லாமல் இத்தொட்டியில் ஊற்றப்படும் நீர் காலியானதும், நேராக இருக்கும் தொட்டியானது சிறிதளவு சாய்ந்துவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘இதனால் இனி ஆசையாய் வாங்கிவைத்த செடியை வாடவிடாமல் பாதுகாக்க முடியும்'  என்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.

‘சிம்பிள் கான்செப்ட்தான்ல!’ என நாம் யோசிக்கலாம். ஆனால் 2015-ம் ஆண்டு மார்ச்சில் தொடங்கிய இதன் வடிவமைப்பில் பலவித மாறுதல்கள் செய்யப்பட்டு தற்போதுதான் முழுவடிவம் பெற்றுள்ளது. விரைவில் நல்ல விலைக்கு சந்தைக்கு வரவிருக்கிறதாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick