ஒரு டைட்டில்...ரெண்டு படம்!

கோலிவுட் இயக்குநர்கள் தலைப்பு பஞ்சத்துல சிக்கியிருக்காங்க போல. ஒரே தலைப்புல ரெண்டு முறை படம் எடுக்கிறார்கள். கூகுளில் படம் பற்றித் தேடும்போது, வருடம் எல்லாம் அடிக்க வேண்டியதாய் இருக்கிறது. கூகுள், விக்கிபீடியாவெல்லாம் கன்ஃப்யூஸாகி இரு படத்தையும் கலந்து செய்தி வெளியிட்டால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன்

நெய்தல் நாட்டுல இருக்கிற மருத்துவர்தான் எம்.ஜி.ஆர். அங்கே சோழ அரசு பற்றி செய்தி சேகரிக்க கார்த்தி மற்றும் அவரது குழுவினரோடு வர்றாங்க ஆபீஸர் ரீமாசென். அப்போ நடக்கிற ஒரு சண்டையில கார்த்தி, எம்.ஜி.ஆர் எல்லாத்தையும் கன்னித்தீவு தலைவன்கிட்ட வித்துட்டுப் போயிடறாங்க ரீமாசென். கன்னித்தீவுல இருக்கிற அழகான இளவரசிதான் ஆண்ட்ரியா. கன்னித்தீவு கூட்டத்தை ஒரு பெரும்படையோடு கைப்பற்ற வர்றார் கொள்ளைக்கூட்டத் தலைவனான பார்த்திபன். கன்னித்தீவு ராஜா கார்த்திகிட்ட உதவி கேட்கிறார். உதவி செய்து பார்த்திபனை வீழ்த்திட்டா இளவரசி ஆண்ட்ரியாவைத் திருமணம் செய்து வைப்பதாகச் சொல்றார் ராஜா. ஆனால் ஏற்படற சண்டையில கார்த்தி, பார்த்திபன் இருவரும்  கொல்லப்பட, எம்.ஜி.ஆர் ஆண்ட்ரியாவைத் திருமணம் பண்ணி நெய்தல் நாட்டுக்கு அழைச்சிட்டுப் போறார்.

பொல்லாதவன்

ஜாலியா பசங்ககூட கேரம் போர்டு விளையாடிக்கிட்டு ஊரைச் சுத்துறார் தனுஷ். நாயகி திவ்யாவை ஒன் சைடா பல வருஷமா லவ் பண்றார் தனுஷ். திவ்யா ஒரு எஸ்டேட்ல குழந்தையைப் பார்த்துக்கிற பெண்ணா வேலை செய்றாங்க. திவ்யா வழக்கமா போகிற லோக்கல் ட்ரெயின்ல தனுஷ் தொங்கிட்டே பயணம் செய்றார். அப்போ திடீர்னு அங்கே வர்ற ரஜினி ஒருத்தரைக் கொலை பண்ணிட்டுப் போயிடறார். அந்த எஸ்டேட்டோட ஓனரே ரஜினிதான் என்பது திவ்யாவுக்கு லேட்டாதான் தெரிய வருது. தனுஷ் ஒரு புது பைக் வாங்க, திவ்யா  தனுஷ் கூடவே எஸ்டேட் போக முடிவு பண்றாங்க. ஒருநாள், தனுஷ் ரஜினியை மடக்கிப் பிடித்து அடிக்க, ரஜினி எல்லா உண்மையும் சொல்றார். ரஜினியோட லவ்வர்தான் லட்சுமி, லட்சுமியை அவரோட மாமா கிஷோர் ரொம்ப நாளா லவ் பண்ணிட்டு இருக்கார். ரஜினி, லட்சுமி கல்யாணம் பண்ணினதால அது பொறுக்காத கிஷோர் லட்சுமியைக் கொலை பண்ணிடறார். அதனால தான் கிஷோரைக் கொலை பண்ணினதா சொல்றார் ரஜினி.

சகலகலாவல்லவன்

ஒரே கிராமமா இருந்தாலும் கமலும், ‘ஜெயம்’ ரவியும் எதிரிகள். அந்த வருடத் தேர்தல்ல யார் ஜெயிப்பதுனு பலமா போட்டி போடறாங்க. அந்த ஊர்ல இருக்கிற ‘ஜெயம்’ ரவி தங்கச்சியான அஞ்சலி மேல கமலுக்குப் பார்த்ததும் காதல். அஞ்சலியைக் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாம்னு முடிவு பண்றார் கமல். அஞ்சலியா, அம்பிகாவானு கமலுக்கு ஒரே குழப்பம். அஞ்சலியைக் காதலிச்சு, ஏமாத்திட்டு, அம்பிகாவைக் கல்யாணம் பண்ண முடிவு பண்றார் கமல். இது தெரிஞ்ச ‘ஜெயம்’ ரவி, தன்னோட தங்கைக்கு நியாயம் வேண்டி போராடுறார். ஃபாரின் ரிட்டர்ன் கெட் அப்ல வர்ற ‘ஜெயம்’ ரவி ‘இளமை இதோ இதோ’னு பாட்டு பாடி அம்பிகாவைத் தன் பக்கம் இழுக்குறார். அம்பிகா இல்லைனா அஞ்சலினு வாழத் தொடங்குகிறார் கமல்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick