ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்!

‘துப்பாக்கி’ படத்துல வர்ற ஸ்லீப்பர் செல் மாதிரிதான் கேம் விளையாடுகிறவர்களும். சைலன்ட் மோடில் இருந்து எப்போது வேண்டுமானாலும் மாறுவார்கள். அவர்களைப் பற்றிய சில விஷயங்கள்,

திடீர்னு உங்க நண்பன் வந்து தொடர்ந்து ஆறு மணி நேர பேட்டிங் மச்சினு சொன்னா, சந்தேகமே இல்லை, அவர் EA ஸ்போர்ட்ஸ்ல கிரிக்கெட் விளையாடுகிற ஜீவன்தான்.

தூங்கும்போதுகூட மைதா மாவு பொட்டலத்தைக் குத்துவது போல் சைகை செய்யும் ஜீவனை எங்காவது கண்டுருக்கிறீர்களா? அவர்  ரெஸ்லிங் போன்ற கேம்கள் விளையாடிக் குழம்பிய மனிதன்.

‘ஓடாது பறக்கும்’ என்கிற பைக்குகளின் விளம்பர  மாடல்கள் போல சாலையில் பைக் ஓட்டும் இளசுகளைப் பார்த்து இருக்கிறீர்களா? அதில் பாதிக் கும்பல் மோட்டோ ஜிபி, நீட் ஃபார் ஸ்பீட் என் எஃப் எஸ் மாதிரியான வாகன விளையாட்டுகளை விளையாடும் ஜீவன்கள் தான்.

பரீட்சைக்கு படிப்பது போல், சில மனிதர்கள் IGABGD, AUYFWK மாதிரியான வாயில் நுழையாத எழுத்துக்களை மனப்பாடம் செய்து கொண்டு இருப்பார்கள். ஜிடிஏ கேம்களில் இருக்கும் சீட் கோடுகளை மனப்பாடம் செய்கிற பிள்ளைகளா இருக்கும்.

சட்டுனு நடுச்சாமத்துல எழுந்து மொபைல்ல ஏதாவது நோண்டிட்டு மறுபடியும் தூங்குகிற பசங்க உங்க வீட்டுல இருந்தா, அவங்க எல்லாம் கண்டிப்பா ஆன்லைனில் கேம் விளையாடும் மனிதர்கள்.

இதுக்கெல்லாத்துக்கும் மேல வயதாக வயதாக, பயங்கர கிராஃபிக்ஸில் கேம்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்கள் என தங்களை அப்டேட் செய்துகொண்டே ஒரு கூட்டம் விளையாடிக்கிட்டு இருக்கு பாஸ். அவங்க பேரன், பேத்திகூட என்னடா இப்படி விளையாடுறார் தாத்தான்னு யோசிக்கிற அளவுக்கு!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick