இன்னும் மூணாவது பார்ட் வேற எடுப்பீங்களா பாஸ்?

’அரண்மனை’க்கும் ‘அரண்மனை-2’க்கும் அப்படி என்னதான் வித்தியாசம்?

அரண்மனை

ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய்னு

மொத்தம் மூணு ஹீரோயின்கள்.

கிளாமர் சிறப்பு சேவை லட்சுமி ராயால் செய்யப்பட்டது.

இதில் ஆண்ட்ரியாவோட கணவர் வினய்.

இதில் சுந்தர்.சி ஆண்ட்ரியாவோட அண்ணன்.

சும்மா இருக்கிற சந்தானம் சமையல் செய்ய அரண்மனைக்கு வருவார்.

இதில் மனோபாலா கோவை சரளாவோட கணவர்.

பேய் ஒரு சின்னப் பொண்ணு கண்ணுக்கு மட்டும் தெரியும்.

பேய் இருக்கானு கண்டுபிடிக்க சுந்தர்.சி கேமரா ஃபிக்ஸ் பண்ணுவார்.

இதுல ஹன்சிகா பேய்.

பேய் ஆண்ட்ரியாவோட உடம்புக்குள்ள மட்டும்தான் புகுந்துச்சு.

பேய் யார் உடம்புல இருக்குனு கண்டுபிடிக்க மந்திரிச்ச முட்டையை யூஸ் பண்ணுவாங்க.

இதுல சாமியாரா கோட்டா சீனிவாசன்.

க்ளைமாக்ஸ்ல அம்மன் பாட்டைப் பிரபல பாடகர்கள் பாடி நடிப்பாங்க.

அரண்மனை-2

ஹன்சிகா,த்ரிஷா,சோனம் பாஜ்வானு மூணு ஹீரோயின்கள்.

(மூணு ராசியான நம்பர்போல!)

த்ரிஷாவே அந்தக் குறையைத் தீர்த்துடுறாங்க. ப்பா!

இதில் த்ரிஷாவோட பாய் ஃப்ரெண்ட் சித்தார்த். (வரலாறு முக்கியம் அமைச்சரே!)

இதில் சுந்தர்.சி த்ரிஷாவோட அண்ணன்.

சமையல் பண்ணிட்டு இருக்கிற சூரி வைத்தியம் பண்ண அரண்மனைக்கு வருவார்.

கோவை சரளா மனோபாலாவோட தங்கச்சி.

பேய் ஒரு பையன் கண்ணுக்கு மட்டும் தெரியும்.

கேமரா வெச்சு பேய் இருக்கானு கண்டுபிடிப்பார்.

இதுல பேய் ஹன்சிகாதான்.

பார்ட்-2 ங்கறதால த்ரிஷா, சுந்தர்.சினு இரண்டு பேர் உடம்புக்குள்ள புகுந்துருச்சு.

பேய் யார் உடம்புல இருக்குனு கண்டுபிடிக்க எலுமிச்சைப் பழத்தை யூஸ் பண்றாங்க.

இதுல சாமியார் ‘ஆடுகளம்’ வ.ஐ.ச.ஜெயபாலன்!

க்ளைமாக்ஸ்ல அம்மன் பாட்டை குஷ்பு பாடறமாதிரி நடிப்பாங்க

-பி.நிர்மல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick