காகிதத்தில் கலக்குறாங்க!

ஸ்யா கொசைனா, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வித்தியாசக் கலைஞர். இவர் காகிதங்களைக் கொண்டே விக்குகள் உருவாக்கியிருக்கிறார். இவை அனைத்தையும் ‘பரோக் ஸ்டைல்’ எனப்படும், 1600-களில் ஐரோப்பிய நாடுகளில் கோலோச்சிய கலை பாணியில் உருவாக்கியிருக்கிறார். இந்த மேட்டர், இணையத்தில் இப்போது செம வைரல். இதே போல், 2014-ம் ஆண்டு காகிதங்களால் இவர் உருவாக்கிய மங்கோலிய நாட்டு திருமண உடைகளையும் தோண்டி எடுத்து வைரல் ஆக்கியிருக்கிறார்கள்.

இது பற்றி அஸ்யா கொசைனா, ‘‘நான் ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சேன். பாரம்பரியத்தோடு நம்ம ஸ்டைலையும் கொஞ்சம் மிக்ஸ் செய்து அடித்தால் பரபரனு ஃபேமஸ் ஆகலாம்னு நினைச்சுதான் இதைப் பண்ணினேன். எனக்கு பொதுவாகவே வரலாற்றுக் காலங்களில் உபயோகித்த விக்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் பரோக் ஸ்டைல் விக்குகள் என்றால் மிக இஷ்டம். இதை இப்போது நாம் பயன்படுத்த முடியாது. அழகியல் நிரம்பியிருக்கும் அற்புதமான கலைப்பொருட்களாக எடுத்துக்கலாம்” என்கிறார்.

போங்க பாஸு, இதெல்லாம் ஒரு மேட்டரா? நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்து காலத்துலயே பேப்பரில் பவர் ரேஞ்சர்ஸ் டிரெஸ் செஞ்சவங்க என காலரைத் தூக்கி விடுபவர்களா நீங்கள்... இன்னும் கொஞ்சம் ரசனை, திறமை, பொறுமையோடு பேப்பரையும் வெச்சு மறுபடியும் முயற்சி செய்தால் அஸ்யா மாதிரியே நீங்களும் வைரலாகலாம். எனக்கு இன்னும் பேப்பர்ல கத்திக் கப்பலே செய்யத் தெரியாது.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick