லிட்டில் ஜான்!

லைவலி என்று ஆபீஸுக்கு லீவ் போட்டுவிட்டு வீட்டில் இருந்தான் ஜான். தன் ஆபீஸுக்கு வந்த ஜானின் மனைவிக்கோ கணவனின் உடல்நலம் குறித்த கவலை. காலை 10 மணி போல் வீட்டுக்கு போன் செய்தாள். போனை எடுத்த ஜான், ‘‘உடம்பு டயர்டா இருக்கு. அதான் ஜூஸ் போட்டுகிட்டுருக்கேன்’’ என்றான். மிக்ஸியின் சத்தத்தில் அவன் சொன்னது காதில் விழவில்லை. மதியம் ஒரு மணிக்கு போன் செய்தபோதும் மிக்ஸியின் சத்தம். கஞ்சி வைத்துக் குடிப்பதாகச் சொன்னான் ஜான். எப்போதும் ஆபீஸ் முடிந்து இரவு ஏழு மணிக்குக் கிளம்பும் ஜானின் மனைவி அன்று மதியம் மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டாள். வீட்டிலோ ஜானின் மகன் மட்டுமே இருந்தான். ‘‘அப்பா எங்கேடா?’’ என்றதற்கு ‘‘அவர் காலையில நீங்க வேலைக்குப் போனதுமே மிக்ஸியைத் தூக்கிக்கிட்டு வெளியே போயிட்டாரும்மா’’ என்றான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்