ஊத்தட்டுமா ஊத்தட்டுமா!

ன்னதான் நம்ம ஊர்ல மதுவிலக்குக்கு ஆதரவாகப் போராடினாலும் சில நாடுகள்ல குடும்பமாகவே மது அருந்துவதுதான் உலக வழக்கம். இப்படி உலகமே தண்ணீரில் சூழ்ந்து இருக்க, விண்வெளியில ‘தண்ணி’  உண்டானு ஆராய்ந்தபோது, கிடைத்த தகவல்கள்.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, மதுவுக்கு என்றுமே தடா  சொல்லி இருக்கிறதாம். ஆனால் ரஷ்யாவின் கோக்நாக்கில் இருந்து அமெரிக்கன் பீர் வரை விண்வெளிக்குச் செல்லாத சரக்கே இல்லையாம்.

ரஷ்ய விண்வெளிப் பயணிகளுக்காக 80-களில் மருத்துவர்களே கோக்நாக் பானத்தைப் பரிந்துரைத்தார்களாம். ஆஹா டாக்டர்ஸ்!

நிலாவில் இரண்டாவதாகக் கால் வைத்த பஸ் ஆல்ட்ரினோ , ‘சர்ச்சில் கொடுத்த மதுவை நிலாவில் ஊற்றினேன். நிலாவில் முதல் முதலாக ஊற்றப்பட்ட திரவமே ஒயின் தான் என்பது ஆச்சர்யம்தானே’ என்கிறார். இதெல்லாம் தப்பு மை சன்!

விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் உணவு மெனுவில் மதுவையும் சேர்க்கலாம் என யாரோ ஒரு நல்லவர் ஐடியா தர, ஆராய்ச்சியாளர்கள் குஷி ஆனாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். பதறிய நாசா மறுபடியும் மதுவுக்குத் தடா எனப் பெரிய எழுத்தில் போர்டில் எழுதியது.

சும்மாவே ரொம்ப யோசிக்கிற ஆராய்ச்சியாளர்கள், இதற்கு யோசித்த ஐடியாதான் அறிவியல் ஆராய்ச்சி. அறிவியல் ஆராய்ச்சி செய்ய மது கொண்டு போறோம்னு அடுத்த பிட்டைப் போட்டு இருக்கிறார்கள். அதுல என்ன ஆராய்ச்சி?

போன வருஷம் ஜப்பான் மது நிறுவனம் ஒன்று, சில பாட்டில் விஸ்கியை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறார்கள். புவியீர்ப்பு இல்லாத சூழலில் மதுவின் தன்மை மாறுதான்னு சோதனை பண்றாங்களாம். வெறும் பாட்டில் தான் திரும்பி வந்திருக்கும்!

நம்ம அரசாங்கத்துக்குத் தெரிஞ்சால் அங்கேயும் ஒரு டாஸ்மாக்கை ஆரம்பிச்சிடுவாங்களே!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick