கேட்டா தப்பா?

பொதுவா நாம போகிற பல இடங்கள்ல ஜோடியா, ஜாலியா பலரைப் பார்ப்போம். அப்படி இருக்கிற கும்பல்ல சராசரியா யார் அதிகம் வர்றாங்கனு ஒரு சர்வே எடுத்தோம். பொது இடமான பீச்சில் இருப்பவர்களிடம் ஜாலியாய் எடுத்த சர்வேயில்...

பீச்சுக்கு அதிகமாக வருவது யார்?

திருமணம் ஆனவர்கள்- 10% (வீட்ல குழந்தைக தொல்லை தாங்க முடியலை பாஸ்)

வேலைக்குச் செல்பவர்கள்- 16.6% (ஆபீஸுக்கு எல்லாம் யாரு பாஸ் போறது?)

வேலையில்லாப் பட்டதாரிகள்- 13.5% (நமக்கு வேற என்ன வேலை?)

கல்லூரி மாணவர்கள்- 43.3% (போரடிக்குது பாஸ்!)

பள்ளி மாணவர்கள்- 16.6% (ஒளிமயமான எதிர்காலம்)

எதுக்கு பார்க், பீச்சுனு சுத்துறீங்க?

இயற்கை அழகை ரசிக்க- 23.3% (நடிகன்டா நீ)  

வேறெங்கும் போக பட்ஜெட் இல்லை- 20% (உண்மையைச் சொல்றவன் தெய்வத்துக்கு சமம் பாஸ்)

சும்மாதான் ப்ரோ- 13.4% (பாம்பின் ஃப்ராட் பாம்பறியும்) 

சொல்ல முடியாது போடா- 43.3% (மரியாதை....மரியாதை!)

மத்தவங்க என்ன நினைப்பாங்கனு ஃபீல் பண்ண மாட்டீங்களா?

இது பொது இடம். யார் வேணும்னலும் வரலாம் பாஸ்- 26.6% (ஆஹான்) 

இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?- 13.5% (ஷோல்டரை இறக்குங்க பாஸ்)                                 

அவங்களைக் கண்ணை மூடிக்கச் சொல்லுங்க- 23.3% (இதைப் பத்தி நான் டெல்லியில பேசுறேன்)

எங்களை மாதிரி ஒரு ஆளோட வர முடியலைனு பொறாமை பாஸ் அவங்களுக்கு- 36.6%


கடைசிக் கேள்வி...

கேட்காம அப்படியே ஒடிப்போ- 100%

-பா.அபிரக்‌ஷன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick