என்னா தத்துவம்!

ம் ஆளுங்க எல்லா விஷயத்துக்கும் வித்தியாசமா விளக்கம் சொல்வாங்க. சாம்பிளுக்கு நான் கேட்ட, படித்த, கேள்விப்பட்ட சில விளக்கங்களைக் கொடுத்திருக்கேன். பாருங்கள், எப்படிப்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்?

எனக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும் பாஸ். ஏன்னா, எனக்காகத்தான் கோழி தன் உயிரையே விட்டுச்சு. எனக்காக உயிரையே கொடுக்கிற ஜீவனை எனக்கு எப்படிப் பிடிக்காம போகும்கிறேன்.

வாழும்போது ஒரு நல்ல புகைப்படம் எடுத்து வெச்சுக்கணும். அப்போதான் இறந்த பின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கச் சுலபமா இருக்கும்.

‘நாம் இருவர், நமக்கு நால்வர்’னு தான் பாஸ் வாழணும். அப்போதான் பொழுது போகலைனா உட்கார்ந்து கேரம் போர்டாவது விளையாட முடியும்.

‘மது ஒழிப்பு தினம்’னா அன்னைக்கு சரக்கு அடிக்கக் கூடாதுனு இல்லை. பாட்டிலில் இருக்கும் சரக்கை குடிச்சு அழிக்கணும்னு அர்த்தம்.

எப்பவும் கடைசி பெஞ்சுல உட்காருவதுதான் பெஸ்ட். அப்போதான் வகுப்பை நல்லா கவனிக்க முடியும். முன்னாடி உட்கார்ந்தால் பின்னாடி என்ன நடக்குதுனு கவனிக்க முடியாது.

எனக்கு தெரிஞ்சு கறுப்பு கலர்தான் உண்மையாவே கலர். ஏன்னா, அதுதான் வெளிச்சத்துலேயும் இருட்டிலேயும் ஒரு கலரா தெரியும்.

சுறுசுறுப்பாய் எல்லா வேலையும் சீக்கிரமே முடித்துவிடுவதால், பல நேரம் சும்மாவே இருந்து போர் அடிக்க ஆரம்பிச்சுடுது. அது தான் சோம்பேறியாவே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

வண்டி ஓட்டும்போது பாட்டு கேட்டுட்டேதான் வண்டி ஓட்டுவேன். அப்போதான் ரோட்ல நடக்கிற விஷயங்கள் மனசைத் திசை திருப்பாது.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick