ராக்கெட் ஜம்ப்!

ட அமெரிக்காவைச் சேர்ந்த யூ டியூப் பயனர் ஜான்ஸன். அவரும், அவரது நண்பர் மாத்யூஸும் தங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி வைரல் ஆகியுள்ளனர்.

‘தியேட்டரில் ஒரே ஒரு டிக்கெட் வாங்கி இரண்டு பேரும் படம் பார்க்கணும்’ இதுதான் அவர்களது உன்னதமான லட்சியம். இதற்காகவே மூளையைக் கசக்கி பல திட்டங்களைத் தீட்டி முயற்சித்துப் பார்க்க, எல்லாமே புஸ்வாணம்தான். ஆனாலும், முயற்சியைக் கைவிடாமல் ஒரு வழியாக சூட்சுமத்தைக் கண்டுபிடித்து, சாதித்தும் காட்டிவிட்டார்கள். தாய்க்குரங்கை குட்டிக் குரங்கு கட்டிப்பிடித்துக்கொள்வதுபோல் (சும்மா... உதாரணத்துக்காக சொல்றேன்).

ஜான்ஸனை மாத்யூஸ் கட்டிப்பிடித்து இடுப்பில் அமர்ந்துகொள்கிறார். இடுப்பில் இருக்கும் மாத்யூஸை மறைத்து பெரிய டி-ஷர்ட்டையும் அதற்கு மேல் ஒரு கோட்டும் அணிந்துகொள்கிறார் ஜான்ஸன். இப்போது டி-ஷர்ட்டுக்குள் மாத்யூஸ், ஜான்ஸனைக் கட்டிப்பிடித்து அமர்ந்திருப்பது நம் கண்களுக்கு பெரிய தொப்பை போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. அப்படியே தியேட்டருக்கு சென்று ‘அவெஞ்சர்ஸ்’ படத்துக்கு ஒரு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு இருவரும் தியேட்டருக்குள் செல்கிறார்கள். சாதிச்சுட்டாய்ங்க.

இந்த வீடியோ யூ டியூபில் இப்போது செம வைரல். இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick