பாத்ரூமில் பாடினால் பரிசு!

ணையத்தைக் கலக்கிக்கொண்டிருந்த ‘BSC’ (பாத்ரூம் சிங்கர்ஸ் காம்பெடிஷன்) பற்றிக் கேள்விப்பட்டதும் அதனை நடத்தி வருகிற மு.பாலகுருநாதனை மடக்கிப் பிடித்து கேட்டேன்.

‘‘அதென்ன பாத்ரூம் சிங்கர் காம்பெடிஷன். எங்கே இருந்து வந்தது இந்த ஐடியா?’’

‘‘நிறையப் பேருக்கு பாடப்பிடிக்கும். நல்லாப் பாடவும் வரும். ஆனா ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்ண மாட்டாங்க. தனியா வீட்டுக்குள்ளேயே பாடிக்கிட்டு இருப்பாங்க. நல்ல வழிகாட்டிகள் பெரும்பாலும் கிடைக்கிறதே இல்லை. சில பேருக்கு அதுக்கு டைமும் கிடைக்கிறதில்லை. அப்படித் திறமையாகப் பாடுறவங்களை ஒண்ணு சேர்த்து, சும்மா ஜாலியாக பாடவைத்து அவங்களுக்கு ஒரு அங்கீகாரமும் கொடுக்கலாமேனு எதார்த்தமாக ஆரம்பிச்சதுதான் இந்த போட்டி ஐடியா.’’

‘‘நீங்க யாரு? இசை மேல உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?”

‘‘நான் கோயம்புத்தூர்ல தனியார் கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். யுவன்சங்கர் ராஜாவோட தீவிர ரசிகன். பாட்டு, இசை பற்றி ப்ளாக், ஃபேஸ்புக்கில் எழுதிக்கிட்டே இருப்பேன். சில மாதங்கள் கிட்டாரும் கத்துக்கப் போனேன். எப்போதும் மியூஸிக்கோட டச்லயே இருப்பேன். அதுதான் காரணம்னு நினைக்கிறேன்.’’

‘‘நீங்களே ரிசல்ட் சொல்லிடுவீங்களா?’’

‘‘இல்லை. என்னோட சேர்த்து நாலு பேர் இந்த டீம்ல இருக்கிறோம். அதில் சரவணக்குமார், இசையமைப்பாளர் ஜேக்கப் மாஸ்டரிடம் துணை இசையமைப்பாளரா இருக்கிறார். கீ போர்டு, கிட்டார் டீச்சிங் கிளாஸும் நடத்திட்டு இருக்கிறார். பால கணேசன் வெளிநாட்டில் வேலை செய்றார். அப்புறம் சௌமியா பிரசன்னா, நல்லா பாடுவாங்க. சென்னையில இருக்காங்க. வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டியாளர்கள் பாடி அனுப்புற பாடல்களை இவங்களுக்கு ஷேர் பண்ணுவேன். அவங்க டைம் கிடைக்கும்போது பார்த்து உடனே மார்க் போட்டுட்டுப் போய்டுவாங்க.’’

‘‘மக்கள்கிட்ட வரவேற்பு எப்படி இருந்தது?’’

‘‘சும்மா ஜாலியாக ஆரம்பிச்சாலும் ரொம்ப சீரியஸாக போட்டி போச்சுங்கிறதுதான் உண்மை. முறைப்படி கால் இறுதி, அரை இறுதி எல்லாம் வெச்சுதான் வெற்றியாளர்களையே அறிவிச்சோம். சுமாரா பாடினவங்கல்லாம் கடைசி நேரத்துல வேற லெவலில் பாட ஆரம்பிச்சுட்டாங்க. செலக்ட் பண்ண நிஜமாவே திணறிட்டோம். ப்ரோமோவுக்காக சில பாடல்களை கூகுள் ட்ரைவில் போட்டு ஃபேஸ்புக்கில் ஷேர் செஞ்சுருந்தோம். மற்ற போட்டியாளர்கள் எப்படிப் பாடி இருக்கிறாங்க, நாம ஏன் தேர்வாகலைனு அவங்களாவே புரிஞ்சிக்க உதவியா இருந்துச்சு.’’

‘‘அடுத்த சீசன் எப்போ?’’

‘‘நேர்மையாகவும் ஃப்ரண்ட்லியாகவும் ப்ரோக்ராமை மூவ் பண்ணிக் கொண்டுபோனதால அடுத்த சீசன் எப்போனு இப்பவே எல்லோரும் ஆர்வமாக கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய நடுவர்கள், நிறையப் போட்டியாளர்கள், நிறையப் பரிசுகள்னு அடுத்த சீசன் இன்னும் கொஞ்சம் பெருசா பண்ணணும்.”

பண்ணிருங்க!

-ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick