ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

சென்னையில எப்படியும் பொழச்சுக்கலாம்தான். ஆனா, வாடகைக்கு வீடு பிடிக்க முடியாது! ஆபீஸுக்குப் பக்கத்துல இருக்கணும், நல்ல தண்ணி வசதி உள்ள வீடா இருக்கணும், வாடகை கட்டுப்படி ஆகுற அளவுல இருக்கணும் என ஆயிரெத்தெட்டு ஆராய்ச்சிகள் பண்ணி  வீடு வீடா ஏறி இறங்கினாதான், ஓரளவுக்காவது நல்ல வீடு கிடைக்கும். ஃபேமிலிமேன்களுக்கு ஓகே. பேச்சுலர்களுக்கு? அரோகராதான்! ‘ஒரு மூலையில தூங்கிக்கிறோம் சார்’னு ஹவுஸ் ஓனர்கிட்ட கெஞ்சிப் பார்த்தாலும் வேலைக்கு ஆகாது. வீட்டைப் பிடிச்சுக் கொடுக்கிற புரோக்கர்களுக்கு கொஞ்சம் கவனிச்சீங்கனா, கிடைக்கிற வீடு குருவிக் கூடாட்டம் இருக்கும். இப்படிப் பல பிரச்னைகளுக்கு மத்தியில, ‘உங்க அநியாயத்தையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா!’னு புலம்பிக்கொண்டிருக்கிற பல நல்ல உள்ளங்களுக்காக உருவானதுதான், ‘நோ புரோக்கர்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

புரோக்கர்கள் தேவையில்லை. நமக்குத் தோதான வீடு கிடைக்கணும்னு பஸ் ஸ்டாப்புக்குப் பக்கத்திலேயோ, ரயில்வே ஸ்டேஷனை ஒட்டியோதான் வீடு கிடைக்கணும்னு தெருத் தெருவா சுத்த வேண்டிய அவசியம் இல்லை. நல்லா இருக்குனு நாம ஃபீல் பண்ற வீட்டுக்கு வாடகை/அட்வான்ஸ் அதிகமா இருக்கேனு வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல ‘இல்லை’கள் நமக்கு இல்லைனா, தொல்லையே இல்லை! ‘நோ புரோக்கர்’ அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து, சென்னையில் நமக்கு எந்த ஏரியாவில் வீடு வேண்டும் என்பதைப் பதிவு செய்தால் போதும். எந்தெந்த இடங்களில் வீடுகள் விற்பனைக்கு, வாடகைக்கு, ஒத்திக்கு இருக்கிறது என எல்லா விளக்கங்களும் திரையில் விரியும். தவிர, எந்தத் தொலைவில் இருந்து எந்தத் தொலைவுக்குள் இருக்க வேண்டும், வீட்டின் வாடகை எவ்வளவு இருக்க வேண்டும், எத்தனை அறைகள் இருக்க வேண்டும், கார் பார்க்கிங் வசதிகள் வேண்டுமா? என அத்தனை ஆப்ஷன்களை கிளிக் செய்து தேடினால், நேரம் மிச்சமாவதோடு, நாம் எதிர்பார்த்த சகல வசதிகளும் பொருந்திய வீடுகள் கிடைக்கும்.

சில வீடுகளுக்கு, ‘ஹவுஸ் ஓனர் தொல்லை கிடையாது’ என்ற ஆச்சரியக் குறிப்புகளையும் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் என்பதால், வீடு தேடுவதற்கு இனி நோ டென்ஷன்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.nobroker.app&hl=en

- கூகுள்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick