ட்ரெண்டிங் காதல்!

பிரபலங்களைக் கனவிலேயே காதலிக்கும் ரசிகர்களுக்கு எந்தக் காலத்திலும் குறைவில்லை. பிரபலங்களுக்கு காதல் கடிதம் எழுதுவதெல்லாம் டைனோசர் காலத்தோடு அழிந்துவிட்டது. தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களை ‘லவ் யூ, செல்லம், முத்தா,’ என்கிற கொஞ்சல்கள்தான்.

பிரபலங்களிடம் இருந்து பதிலே வரவில்லை என்றாலும், ‘சாப்டியா, குட் மார்னிங், தூங்கிட்டியா’ என இவர்கள் கொடுக்கும் கொஞ்சல் ட்விட்டுகள் மட்டுமே ட்விட்டரில் டன் கணக்கில் இருக்கும். சிலரை பிரபலங்கள் பிளாக் செய்யும் சம்பவங்கள்கூட நடந்து இருக்கின்றன. மனம் தளராமல் வேறு ஐ.டி-யில் காதல் பாடத் தொடங்கிவிடுவார்கள். சரி மேட்டருக்கு வர்றேன்.

ஜேக் டி. ஆஸ்டின் என்கிற ஹாலிவுட் நடிகரை ட்விட்டரில் துரத்தி துரத்திக் காதலித்து இருக்கிறார் டேனியல் சீஸர்.  2009-ம் ஆண்டு ஆரம்பித்து இன்றுவரை ஆஸ்டினுக்கு தொடர்ச்சியான லவ் வாங்கியாக ட்விட்டி இருக்கிறார் டேனியல். ‘2010-ம் ஆண்டே தனக்கும், ஆஸ்டினுக்கும் திருமணம் ஆனால் இது ஆஸ்டினுக்குத் தெரியாது’ என ரொமான்ஸிக்கொண்டு இருந்தார் டேனியல். ‘நீ அழகா இருக்க. சும்மா, சொல்லணும்னு தோணுச்சு’, ‘உனக்கு இந்தத் துணி நல்லா இல்ல’, ‘நீ சிரிச்சா செமையா இருக்கு’, ‘உன்னை எப்படியாவது சந்திக்கணும்’ போன்று தினமும் ஆஸ்டினை லவ் டார்ச்சர் செய்தார் டேனியல்.

இந்த ஆண்டு ஆஸ்டின், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேனியல் மீது பைத்தியமாக இருப்பதாக அறிவித்து, இருவரும் கிஸ்ஸும் ஒரு படத்தை அப்லோடினார். இதைப் பார்த்ததும் பற்றிக்கொண்டது இணையம். டேனியல் காதலே வெற்றி பெறும்போது, நாமளும் முயற்சியைக் கைவிடக்கூடாதென, ஜஸ்டின் பீபர் ரசிகைகள் எல்லாம் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

எல்லாப் பொண்ணுங்களும் சூப்பர் ஹீரோவுக்கே ஆசைப்பட்டா, சுமார் மூஞ்சி குமார் எல்லாம் என்ன பண்றதாம்?

-சுமார் மூஞ்சி குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick