சாதிச்சுட்டார்!

யார் யாரோ எப்படி எப்படியோ சாதனைகள் நிகழ்த்த ஒருவர் புஷ்-அப்ஸ் எடுத்தே உலக சாதனை புரிந்திருக்கிறார். கே.ஜே.ஜோசப். ஆச்சர்யமா இருக்கா?

கேரளாவைச் சேர்ந்த இவரை அங்கே இந்தியன் ப்ரூஸ்லீனுதான் கூப்பிடறாங்க. கராத்தேவும் களரியும் இவருக்கு அத்துப்படி. இரண்டிலும் மாஸ்டராகவும் இருக்கிறார். ஓங்கி அடிச்சா ஏழு பேர் விழும் அளவுக்கு அப்படி ஒரு ஸ்டீல் பாடி. இந்த உடம்பை வெச்சு என்ன செய்யலாம்னு யோச்சித்தவருக்கு பொசுக்குனு புஷ்-அப்ஸ் ஐடியா தோன்ற தீவிரமா பயிற்சி எடுத்தார். பக்காவா தயாரானதும் மீடியாக்களை வர வெச்சு 60 நொடியில் 82 புஷ்-அப்ஸ் எடுத்து சும்மா வேடிக்கை பார்க்க வந்தவர்களையே வியர்த்துக் கொட்ட வைத்துவிட்டார். இதுவரை உலக சாதனையாக இருந்த அமெரிக்காவில் உள்ள ரோன் கூப்பரின் 60 நொடிக்கு 79 புஷ்-அப்ஸ் சாதனையை ஜோசப் காலி பண்ணிவிட்டார்.

கேரளாவின் சுற்றுலாத்தளமான மூணாறில் பிரபல ஆயுர்வேத சென்டரில் மேனேஜராக இருக்கும் ஜோசப்பிடம் அடுத்து என்ன செய்யப்போறீங்கனு பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு  ‘இதெல்லாம் சும்மா டிரெய்லர்தான் அடுத்து ஒரு நிமிடத்தில் 90 புஷ்-அப்ஸ் எடுக்கப்போறேன். அப்போ மறுபடியும் உங்களைக் கூப்பிடுறேன்’ என ஆர்ம்ஸ் தூக்கிச் சொல்லியிருக்கிறார். இதற்கு முன் இவர் ஒரு மணி நேரத்தில் 2,092 புஷ்-அப்ஸ் எடுத்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ‘எந்திரன்’ சிட்டியாகவே வாழும் ஜோசப்பின் அடுத்த சாதனைக்கு ஆல் தி பெஸ்ட்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick