நல்லாயிருங்க நடுவர்களே!

மயங்களில் டி.வி-யில வர்ற ரியாலிட்டி ஷோ நடுவர்கள் நல்லவங்களா, கெட்டவங்களானே தெரியலையேப்பா!

நாம ஒரு நிகழ்ச்சி பார்க்கிறப்போ ஒருத்தர் நல்லாத்தானே பாடுறார்னு அவருக்குக் கைதட்ட முடிவு பண்ணுவோம். அப்போ கும்பலா அந்தப் பையனைக் கடுமையாத் திட்டி அழ வைக்கிறீங்க. சரி நம்ம சங்கீத அறிவுதான் குப்பையோனு நினைச்சு அடுத்த நாள் பார்த்தா, அதே பையனுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு ரேஞ்சுக்கு எழுந்து நின்னு பாராட்டுறீங்க. கமலைவிட அதிகம் குழப்புறீங்க பாஸ்!

ஜோக்ஸ்னு போட்டு ஹிஹின்னு போடுறதை விட, டி.வி-யில ஜோக்னு எதையாவது சொல்றப்போ, பின்னாடி ‘ஹாஹா’னு சத்தம் வந்தா கடுப்பாகுது. அதைவிட மதன்பாபுத்தனமா எதையாவது ஒருத்தர் சொல்லிட்டு அங்க ஜட்ஜ்னு உட்கார்ந்து இருக்கிற ஜீவன் ‘ஹோஹோஹோ’ன்னு சிரிக்கறப்போ, ‘அந்நியன்’ பட விக்ரம் மாதிரி கோபம் வருது பாஸ்!

பொய் சொல்லியே வாழ்ந்த வக்கீல், கடைசியா நீதிபதி ஆகிற மாதிரி ஜோக்கே சொல்லாம டி.வி-யில வந்த ஜீவன் ஒரு கட்டத்துல அதே நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆகிடறார். ஜோக் சொல்ல புதுசா வந்து இருக்கிற பையனைப் பார்த்து, அந்த ஜட்ஜ் ‘ஏம்பா தம்பி, உனக்கு ஸ்டேண்ட்-அப் காமெடியைத் தவிர எதுவுமே தெரியாதா?’னு கேட்கிறீங்க. அப்போ ஒண்ணே ஒண்ணுதான் தோணுச்சு. குமாரு, உனக்கே அது மட்டும்தானே தெரியும்!

சிலரோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு, ‘நீயெல்லாம் கோலிவுட்டுக்கு வரணும்’னு நீங்க சொல்றப்போ நாமளே கடையை ஸ்டுடியோவுலதானே போட்டு இருக்கோம்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொன்னதே இல்லையா பாஸ்?

அந்த மூணாவது நிமிஷத்துல 32-வது நொடியை கரெக்டா கேட்ச் பண்ணி பாராட்டுற உங்க மனசிருக்கே... அந்த மனசுதான் சார் தெய்வம். ஆனா, அது என்னன்னு புரியாம அதை பெர்ஃபார்ம் பண்ணினவன் பார்க்கிற பார்வை இருக்கே... அந்தப் பார்வைகூட தெய்வம்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick