நண்பேண்டா

யக்குநர் விக்ரமன் தனது பெரும்பாலான படங்களில் ‘காதல்ங்கிறது...’, வாழ்க்கைங்கிறது...’னு ஒவ்வொரு விஷயத்துக்கும் வித்தியாசமா விளக்கம் கொடுத்திருப்பார். அதே ஃபார்முலாவை ஃபாலோ பண்ணி நட்பை பற்றி சில விளக்கங்கள்...

நல்ல நண்பன் கிடைச்சாலே போதும், வாழ்க்கை டாஸ்மாக் பக்கத்துல இருக்கிற ஃபாஸ்ட்புட் கடை மாதிரி அமோகமா இருக்கும்.

ஃப்ரெண்டுங்கிறவன் க்ரீம் பிஸ்கட் மாதிரி, அவன்கிட்ட ‘க்ரீம்’ங்கிற நிறையை மட்டும் எடுத்துக்கிட்டு ‘பிஸ்கட்’ங்கிற குறையைத் தூக்கிப் போட்டுடக் கூடாது.

சிறந்த நண்பன் நோக்கியா 1100 மொபைல் மாதிரி, நம்ம கையை விட்டுப் போயிட்டா, மீண்டும் கிடைக்கிறது கஷ்டம்.

நட்புங்கிறது பென்-டிரைவ் மாதிரி. அதில் ‘ஈகோ’ங்கிற வைரஸை ஏற விட்டோம்னா வாழ்க்கைங்கிற கம்ப்யூட்டரே கெட்டுப் போக சான்ஸ் இருக்கு மக்களே...

ஒருத்தனுக்கு தவறான நட்பு கிடைச்சா, அவன் வாழ்க்கை கோயில் முன்னாடி கழட்டிப் போட்ட புது செருப்பு மாதிரி. கண்டிப்பா காணாமப் போயிடும்.

நண்பர்களுக்குள் ரசனை வேறுபாடுங்கிறது தலைமுடி மாதிரி. நிறைய இருந்தாலும் நல்லாருக்காது, சுத்தமா இல்லேன்னாலும் நல்லாருக்காது.

நண்பன் இல்லாத வாழ்க்கை, ஐஸ்க்ரீம் இல்லாத கல்யாண விருந்து மாதிரி முழுமையற்றது.

நட்புங்கிறது ஹெட்செட் மாதிரி. இரண்டில் ஒரு ஸ்பீக்கர் ரிப்பேர் ஆனாலும் அது குப்பைக்குதான் போகும்.

உண்மையான நண்பன் ‘டைம்பாஸ்’ புக் மாதிரி, நம்மளை எப்போதும் சிரிக்க வெச்சுகிட்டே இருப்பான். கேலி, கூத்து, கிண்டல், கலாய்னு வாழ்க்கை ஜாலியா போகும். லாலாலலா...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick