சுட்டி வயசில் தெனாலி!

சின்ன வயசா இருக்கிறப்போ, நமக்குனு சில பயங்கள் உண்டாகி இருக்கும். அதெல்லாம் பொய்னு தெரியறப்போ, அந்தப் பால்ய காலகட்டத்தைக் கடந்து ஏழு எருமை வயசு ஆகியிருக்கும்.

பார்லே ஜிக்கு கொடுக்கிற சக்திமான் ஸ்டிக்கரை தெய்வமா நினைச்சு பீரோவுல ஒட்டி வைக்கிறது. ராத்திரி பேய்க்கனவு வராம காப்பாத்தினதே சக்திமான்தான்னு நம்பினது.

‘தேவர் மகன்’ படம் பார்த்துட்டு, சின்னக் குழந்தைங்க நம்ம நெஞ்சுல மிதிச்சாலே செத்துப்போயிடுவோம்னு நம்பினது.

விதையோடு சாப்பிட்டா வயித்துல செடி முளைக்கும்னு சொன்னப் பயலுகளை நம்பி ராத்திரி எல்லாம் தூங்காம முழிச்சு இருந்தது.

சாமிக்கு வைக்கிற சாப்பாட்டை சாமி தின்னுடுவார்னு பயந்து, இலையவே பார்த்துக்கிட்டு இருந்தது

டபுள்யூ டபுள்யூ எஃப்ல இருந்த அண்டர்டேக்கர் சாகாவரம் பெற்றவன்னு நம்பினது.

பாத்ரூம் போறப்போ எல்லாம், ஒல்லியாகிடுவோமோனு பயந்தது.

முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும்னு பீதியானது.

பல்லு விழுந்தா, அதை எடுத்துக்கொண்டு போய் புதைச்சு வைக்கிறது. அப்படி இல்லாட்டி பல்லு முளைக்காதுனு பிக்காளிப் பசங்க சொன்னதை நம்பியது.

அது நெறைய இருக்கு பாஸ் லிஸ்ட்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick