ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

மக்கெல்லாம் செயற்கை உறுப்பு போல ஆகிவிட்டது செல்போன். ‘எப்போபாரு போனையே நோண்டிக்கிட்டு, போய் படிக்கிற வேலையைப் பாரு!’ எனப் பின்மண்டையில் தட்டும் அம்மா, அப்பாக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. யெஸ்..! ‘ஆண்ட்ராய்டு போனைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். பரீட்சை நேரத்திலும் போனைப் பயன்படுத்தலாம் என்று’னு தில்லா டயலாக் சொல்லலாம். ஏன்னா, பரீட்சை நேரத்தில் கண்ணும் கருத்துமாகப் படிக்க, இருக்கவே இருக்கு ‘ஸ்டடி ஹெல்ப்பர்’ அப்ளிகேஷன்! திறந்துடுவோமா?

தேர்வு நேரத்தில்தான், கிரிக்கெட் போட்டிகளும், கல்யாணம், காதுகுத்து, கறிவிருந்து போன்ற விசேஷங்களும் வரிசை கட்டும். இதையெல்லாம் மீறி, படிக்க அமர்ந்தாலும் கையில் இருக்கும் மொபைல் போன் சும்மாவா விடும்? ‘ரிலாக்ஸா கொஞ்ச நேரம் கேம் விளையாடிட்டுப் படிக்கலாமே?’, ‘ஃபேஸ்புக்குல நம்ம போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கும்?’, ‘வாட்ஸ் அப்ல எதுவும் ஆடியோ வந்திருக்குமோ?’, ‘மேட்ச் பார்க்கலைனா என்ன, ஸ்கோர் மட்டும் தெரிஞ்சுக்கிட்டு படிக்க உட்கார்ந்துடுவோம்’னு மைண்டில் அடிக்கும் இந்தத் தாறுமாறு டிரம்ஸில் மனசு குத்தாட்டம் போடும். இப்படி, படிக்கும் ஆர்வத்தோடு அல்லது பதட்டத்தோடு படிக்க அமரும்போது மொபைல் போன் வழியாக எந்த விதமான தொந்தரவுகளும் வரக் கூடாது என்பதற்காகவே இந்த அப்ளிகேஷன்.

அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, இன்றைய பாடங்கள் என்ன, எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை படிக்கப் போகிறோம், இன்றைய இலக்கு என்ன? இப்படி ஏராளமான கேள்விகளுக்குப் பதில்களை செட்டிங்கில் பதிவு செய்துகொள்ளலாம். தவிர, படிக்கும் நேரத்தில் நமது மொபைல் அப்ளிகேஷனில் இருக்கும் எந்தெந்த அப்ளிகேஷன்கள் ‘ஆக்டிவ்’ ஆக இருக்க வேண்டும் என்பதையும் தேர்வு செய்துகொள்ளலாம். அவ்வளவுதான்! புத்தகத்தைத் திறந்து படித்துக்கொண்டிருக்கும்போது, ‘ஸ்டடி ஹெல்ப்பர்’ அப்ளிகேஷனில் நாம் பதிவு செய்த எந்த அப்ளிகேஷன்களில் இருந்தும் ‘நோட்டிஃபிகேஷன்’ தொந்தரவுகள் இருக்காது என்பதோடு, நாம் குறிப்பிட்ட நேரம்வரை அந்த அப்ளிகேஷன்கள் ‘பிளாக்’ செய்யப்பட்டிருக்கும். அதாவது, நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் மீது அடிக்கடி கவனம் இருக்கும் என்பதால், படிக்கும் நேரத்தில் அதையெல்லாம் தவிர்க்கலாம். இதெல்லாம் போதாது, ஜென் நிலையில் இருந்தாதான் எனக்கு படிப்பே வரும் என்றால், ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் ஆஃப் செய்துகொள்ளும் வசதியை வைத்திருக்கிறது ‘ஸ்டடி ஹெல்ப்பர்’ அப்ளிகேஷன். தவிர, ‘இன்னைக்கு ரெண்டு பாடங்கள் முடிக்கணும்’, ‘போன அரியருக்கான பாடத்தைப் படிக்கணும்’ என தினம் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டால், அதை ‘இலக்கு’ என நிர்ணயிப்பதோடு, அதை அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளை தினம் ஒரு தகவலாகவும் கொடுக்கும்!

கொஞ்சம் படிங்க பாஸ்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=tamseng.co.kr.studyhelperglobal

-கூகுள்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick