இதுக்குப் பேர்தான் ரூம் போட்டு யோசிக்கிறதா?

ப்பான் விஞ்ஞானிகள் சல்லித்தனமா யோசிச்சு கண்டுபிடிச்ச சில்லியான விஷயங்கள்.

ஹெல்மெட்டைப் பாதுகாப்புக்காகக் கண்டுபிடிச்சது போக இப்போ தூங்குறதுக்காகவும் கண்டுபிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பஸ், ட்ரெயின்களில் நீண்ட தூரம் செல்லும்போது அசதியாய் இருக்கும். அப்போ வசதியா இருக்கட்டுமேனு அடுத்தவன் தோளில் தலையை முட்டுக் கொடுத்து திட்டு வாங்குவோம். இனிமே அந்தப் பிரச்னை கிடையாது. இந்த ஹெல்மெட்டை பின்பக்க சுவற்றின் உள்ள ஹேங்கரில் இணைத்தால் போதும், ஆடாமல் அசையாமல் ஸ்டெடியா தூங்கியபடி செல்லலாம். அதே போல உட்கார சீட் கிடைக்காமல் நின்றுகொண்டு செல்லும் ஆட்களுக்கு ஆள் உயர கம்பியை நேராக நிமிர்த்தி அதன் அடியில் ஸ்டாண்ட் மேலே ஸ்பான்ச் வைத்திருக்கிறார்கள். தாடையை அதில் வைத்து நின்றுகொண்டே தூங்கலாம். ஓகேதானே?

இதுவும் தூங்குற சமாச் சாரம்தான். இப்போதெல்லாம் நிறையப் பேர் வீட்ல தூங்குறதே இல்லை. ஆபீஸுக்குப் போய்  ஃபைலைத் தலைக்கு வெச்சு படுத்தாதான் நல்லாத் தூக்கமே வருதுனு சொல்றாங்க. அதே மாதிரி ஸ்கூல், காலேஜ் பசங்களும் புக்ஸை தலைக்கு வெச்சாதான் ஆழ்ந்த தூக்கம் வருதுனு சொல்றாங்க. இதுக்கு ஏதாவது கண்டுபிடிச்சாகணுமேனு விஞ்ஞானிகள் மூளையைக் கசக்க அதிரடியா உருவானதுதான் புத்தகத் தலையணை. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நிஜப் புத்தகத்தைப் போலவே இருக்கும் இந்தத் தலையணையில் படுத்தால் பள்ளி, அலுவலகங்களில் தூங்கிய ஃபீல் அப்படியே கிடைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தில் வடிவேலு சொல்வாரே, ‘கொசுவுக்கெல்லாம் தம்பி குடை பிடிக்கிறாரு’னு; அப்படியான ஒரு மேட்டர்தான் இதுவும். இங்கே கொசுவுக்குப் பதிலா ஷூவுக்குக் குடை பிடிக்கிறாங்க. இந்தக் குடை ஷூவை ஜப்பான் மொழியில் சிண்டோகுனு சொல்றாங்க. ஷூவின் மேலே சின்னதாய் ஒரு குடையைச் செருகிய அந்த அபூர்வ விஞ்ஞானி கெஞ்சி கவாகமியிடம் விளக்கம் கேட்டால், ‘இப்படி ஒரு கண்டுபிடிப்புத் தேவையே இல்லாத ஒன்றுதான். இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும். அதனால்தான் இதை உருவாக்கினேன்’னு விளக்கம் கொடுத்திருக்கிறார். அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரி பழமொழியை ஷூவுக்கும் கொடை பிடிப்பான்னு மாத்துங்க பாஸ்.

வெங்காயம் வெட்டும்போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்யலாம்னு ஒரு குழு தீவிரமா யோசிச்சுருக்காங்க. அப்போ அவங்களுக்கு ஒரு டெரரான ஐடியா கிடைச்சிருக்கு. சாதாரண கண்ணாடியில் லென்ஸைக் கழட்டிவிட்டு இரண்டு பக்கமும் ரிமோட் கன்ட்ரோல் காரில் இருக்கும் மோட்டாரைச் செருகி, அதில் பேட்டரியை இணைத்து சின்னதா இரண்டு ஃபேன்களை வைத்திருக்கிறார்கள். வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணில் ஏற்படும் எரிச்சலை இந்த சிறிய விசிறி தடுக்குமாம்.

எவ்ளோ ஃப்ரீயா இருக்காய்ங்க!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick