கல்யாணம் கட்டிக்கலாமா?

பெண்களைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க சில ஆண்கள் செய்த அட்ராசிட்டி சம்பவங்கள். 

அமெரிக்காவின் டியான் ஸ்மித் என்பவர் ஜெனிஃபர் என்ற பெண்ணைக் காதலித்தார். ஜெனியை எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம்னு உருண்டு புரண்டு யோசித்தவருக்கு வித்தியாசமான ஒரு ஐடியா கிடைத்தது.

ஜெனிக்கு அன்று பிறந்தநாள். அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திறந்து பார்க்க கையில் ஒரு கார்டுடன் நிற்கிறார் அவர் தங்கை. அந்த கார்டில் இருந்த வாசகத்தின்படி வீட்டுக்கு வெளியில் வருகிறார். பின்னர் அவரது சகோதரர், நண்பர் என ஒவ்வொருவரின் கார்டின்படி நடக்க கடற்கரை உணவகம் வருகிறார் ஜெனி. அங்கு அவரது தாயார் ஒரு மொபைலைத் தருகிறார். அந்த மொபைலில் இருக்கும் வீடியோவில் டியான் ஸ்மித்.

‘ஜெனி என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?’ என்ற வாசகம் தாங்கிய அட்டையை, 365 நாட்கள் கையில் வைத்திருப்பதாய் காதல் பாடலைப் பாடியபடி உருகுகிறார் டியான் ஸ்மித்.  வீடியோவைப் பார்த்த ஜெனிக்கு இதுதான் பெஸ்ட் மேரேஜ் புரபோசல் என்று முடிவுக்கு வந்து திரும்பிப் பார்க்க அங்கே டியான் ஆஜராகி அதிர்ச்சி கொடுக்கிறார்.  ஜெனிக்குத் திருமண மோதிரத்தைக் கொடுக்கிறார்.  சுற்றி நின்ற கூட்டம் கைதட்ட ரெண்டு பேரும் கட்டிப்பிடிக்க அடுத்து என்ன நடந்துச்சுனு சொல்ல மாட்டேன்.

ஆஸ்திரேலியாவின் லியாம் கூப்பர் தன்னுடைய பள்ளித் தோழி எமி ஸ்மித்தை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்த கதையை கெளதம் மேனனை படமாவே எடுக்கச் சொல்லலாம் பாஸ். கூப்பர் தன்னுடைய சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர், தெரியாதவர்னு ஏகப்பட்ட நபர்களை சிட்னியில் இருக்கும் பிரபல தியேட்டருக்குக் கூட்டிப்போகிறார். கூடவே எமியும்.  படம் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் ‘உச்சா வருது’ன்னு லியாம் நழுவ, திரையில் படம் நிறுத்தப்பட்டு லியாம் நடித்த வீடியோ ஆல்பம் ஓடுகிறது.

கிட்டத்தட்ட ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஹோசனா ஸ்டைலில் இருக்கும் அந்த ஆல்பத்தை எல்லோரையும் போல எமியும் பார்த்து ஆச்சரியப்படுகிறார். திடீரென கையில் ஷாம்பெயின் பாட்டில், பொக்கேயுடன் வரும் கூப்பர், ‘நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுறேன்’னு சொல்ல சந்தோசத்தில் பொங்கிப் பொங்கி அழுகிறார் லியாம். அடுத்து என்ன நடந்துச்சுனு இப்பவும் சொல்ல மாட்டேன்.

ஆலன், லிண்ட்ஸே ஜோடியால் பேஸ்கட் பால் கிரவுண்டில் நடந்தது ஓர் அதிசயம். லிண்ட்ஸே, பேஸ்கட்பால் விளையாட்டின் இடைவேளையில் ரசிகர்களை ஆடி சந்தோசப்படுத்தும் சியர்ஸ் கேர்ள். வழக்கம்போல அன்று நடந்த போட்டியிலும் பம்பரம் போல சுழன்று ஆடினார். கடைசியில் எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டு கிளம்ப நினைக்கும்போது, திடீரென கிரவுண்டிற்குள் நுழையும் ஆலன் ஆயிரக்கணக்கான ஆடியன்ஸ் முன்னிலையில் முட்டி போட்டு என்னை ஏத்துக்க லிண்ட்ஸேன்னு உருக வழக்கம் போல அவரும் ஆனந்தக் கண்ணீர் வடிக்க அடுத்து என்ன நடந்துச்சுன்னு நான் இப்போ சொல்லத்தான் போறேன். உலகநாயகன் வழக்கமா செய்வாரே, அதான் பாஸ் நடந்துச்சு!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick